Latest News

இந்தியாவில் தலித் கிறிஸ்தவர்கள் நிலை குறித்து போப்பிடம் முறைப்பாடு !!


இந்தியாவில் தலித் கிறிஸ்தவர்கள் கத்தோலிக்கத் திருச்சபையால் புறக்கணிக்கப்படுவதாகக் கூறி, அவர்கள் சார்ந்த அமைப்பினர் புதுடில்லியில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

புதுடில்லியிலுள்ள வாட்டிகன் தூதரகத்தின் முன்பாக இந்தப் போராட்டம் திங்கட்கிழமை நடைபெற்றது.

தலித் கிறிஸ்தவர்கள் சார்ந்துள்ள தேவாலயங்கள் கூட தங்களைப் புறக்கணிப்பதாக இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்தெரிவித்தனர்.

உலகளவில் ஒடுக்கப்பட்ட நிலையில் உள்ள கத்தோலிக்க மக்களுக்காக குரல் கொடுக்க வாட்டிகன் மறுத்து வருகிறது என அவர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.

எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கைக்கான விஜயத்தை போப் பிரான்ஸிஸ் மேற்கொள்வதையும் இந்த செயல்பாட்டாளர்கள் கண்டித்துள்ளனர்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.