தமிழகத்தில் 1,200 ஆம்னி பஸ்கள் இயங்கி வருகின்றன. இவைகள் சென்னையிலிருந்து திருச்சி, கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி உள்பட அனைத்து பகுதிகளுக்கும் சென்று வருகின்றன. அதுமட்டுமின்றி, அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களுக்கும் இயக்கப்படுகிறது. டீசல் விலை உயர்வு, சுங்கவரி உள்பட பல்வேறு காரணங்களை கூறி கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் 10 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை ஆம்னி பஸ்களுக்கு கட்டணம் உயர்த்தப்பட்டது. அதன்படி, சென்னையிலிருந்து திருச்சிக்கு
ஸீ 720, மதுரைக்கு ஸீ 780, திருநெல்வேலி, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஸீ 800 வசூலிக்கப்படும் என ஆம்னி பஸ் உரிமையாளர்கள் அறிவித்தனர். கடந்த தீபாவளிப் பண்டிகையின் போது, ஆம்னி பஸ்கள் கூட்டத்துக்கு தகுந்தாற்போல் கட்டணத்தை 3 மடங்கு வரை உயர்த்தி வசூல் செய்தனர் என பயணிகள் புகார் தெரிவித்தனர்.
இந்நிலையில், இம்மாதம் 25ம் தேதி கிறிஸ்மதுஸ், புது வருடப்பிறப்பு, போகி பண்டிகை, பொங் கல் உள்பட பல பண்டிகைகள் வருகின்றன. குறிப்பாக, பொங்கல் பண்டிகைக்கு 3 நாட்கள் அரசு விடுமுறை என்பதால் சென்னையில் வசிக்கும் வெளியூர் வாசிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வருவர். ரயில்களில் 60 நாட்களுக்கு முன்பே முன்பதிவுக்கான டிக்கெட் முடிவடைந்த நிலையில், பயணிகளின் அடுத்த குறி அரசு மற்றும் ஆம்னி பஸ்கள் மட்டுமே. இதை கருத்தில் கொண்டு ஆம்னி பஸ்கள் தற்போதிலிருந்தே கல்லா கட்ட ஆரம்பித்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. பெரும்பாலான ஆம்னி பஸ் நிறுவனங்கள் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் உள்ளிட்ட நாட்களுக்கு கடந்த 2 நாட்களாக ஆன்லைன் பதிவு முறையை துவங்கிவிட்டன.
இதுகுறித்து, பயணிகள் கூறியதாவது: ஒவ்வொரு பண்டிகையின் போதும் ஆம்னி பஸ்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்து வருவது வாடிக்கையாகி வருகிறது. அதிகாரிகளும், கடமைக்கு ஒரு குழு அமைப்பதாக கூறி ஒரு சில ஆம்னி பஸ்களை மட்டும் பிடித்து மற்ற பஸ்களை கண்டுகொள்வதே கிடை யாது. இதனால் முழுக்க முழுக்க பாதிக்கப்படுபவர்கள் பயணிகளே. எனவே விடுமுறை நாட்களுக்கு குறைந்த நாட்களே இருப்பதாலும், ஆம்னி பஸ்கள் ஆன்லைன் பதிவு முறை துவங்கி இருப்பதாலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தற்போதிலிருந்தே நடவடிக்கையை துரிதப்படுத்தி, கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும் என்றனர்


No comments:
Post a Comment