இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நான்காம் ஆண்டாக பயங்கரவாத எதிர்ப்பு இரத்ததான முகாம்களை தமிழகம் தழுவில் நடத்த அறிவித்திருந்தது.அதன்படி சென்னையில்(14.12.14) ஞாயிறன்று
மண்ணடி,நேதாஜிநகர்,புளியந்தோப்பு,பாடி,எம்.ஜி.ஆர்.நகர்,ஆசாத்நகர்,சைதாப்பேட்டை,தரமணி உள்ளிட்ட எட்டு இடங்களில் நடைபெற்றது.
மண்ணடி தலைமையகத்தில் நடந்த முகாமை இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தும்,ஸ்டான்லி அரசு மருத்துவமனையும் இணைந்து நடத்தியது.இந்நிகழ்ச்சிக்கு வடசென்னை மாவட்ட நிர்வாகிகள் தலைமை தாங்கினர்,பாரீஸ் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.தலைவர் எஸ்.எம்.பாக்கர் முகாமை துவக்கி வைத்தார்,சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா,தொழிலதிபர் டாக்டர்.அப்துல் மாலிக் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
ஆசாத்நகர் முகாமை இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தும்,கே.எம்.சி மருத்துவமனையும் இணைந்து நடத்தியது.
இந்நிகழ்ச்சிக்கு கிளை தலைவர் ஷேக்தாவூது தலைமை தாங்கினார்,மாவட்ட துணை செயலாளர் ஜியாவுதீன்,தொண்டரணி செயலாளர் ஷேக் அப்துல்காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில செயலாளர் முஹம்மது ஷிப்லி முகாமை துவக்கி வைத்தார்.சிறப்பு அழைப்பாளர்களாக டாக்டர்.வெங்கடேஸ்வரன்,ஆவின் கூட்டுறவு சங்க தலைவர் தமிம் அன்சாரி,கவுன்சிலர்கள் ஏ.ஈ.வெங்கடேசன்,எஸ்.அமீர்பாஷா ஆகியோர் கலந்துக்கொண்டர்.சென்னையில் நடந்த எட்டு முகாம்களில் 556 பேர் இரத்ததானம் செய்தனர்.
அதிகபட்சமாக சைதாப்பேட்டை முகாமில் 100 பேர் இரத்ததானம் செய்தது குறிப்பிடத்தக்கது.



No comments:
Post a Comment