Latest News

கலவரத்திற்கான சதி - இந்து முன்னணி அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மனோகரன் கைது!

சென்னை இந்துமுன்னணி அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மனோகரன் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை சிந்தாதிரிப் பேட்டையில் உள்ள இந்து முன்னணி அலுவலகத்து கடந்த் 10ஆம் தேதி தொலைபேசியில் பேசிய மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனை அடுத்து இந்து முன்னணி நிர்வாகிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், நடத்திய விசாரணையில்  கும்மிடிப்பூண்டி பகுதியிலிருந்து, மனோகரன் என்பவரது செல் போனிலிருந்து  மிரட்டல் வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து மனோகரனை கைது செய்த காவல்துறையினர் விசாரித்த போது தொலைபேசியில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததை மனோகரன் ஒப்புக் கொண்டார்.
இந்துமுன்னணி அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தமை, கலவரத்திற்கான சதி திட்டமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதா? என மனோகரனிடம் காவல்துறையினர் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.