மெயில் இன்டெர்நெட் இல்லாத வாழ்க்கையை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா, இன்டெர்நெட் கண்டறியப்பட்டு 45 ஆண்டுகள் ஆகிறது, ஆமாங்க 1969 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 29 தான் இணையம் மூலம் முதல் முறையாக தகவல் அனுப்பப்பட்டது. அதுவும் இரு கணினிகளுக்கும் தொடர்பு ஏற்ப்படுத்தப்பட்டு ARPANET மூலம் இது சாத்தியமானது. உலகின் முதல் கணினி நிறுவனமாக ARPANET திகழ்ந்தது. இந்த நிகழ்வு சரியாக 22.30 மணியளவில் நடைபெற்றது. கணினி மூலம் அனுப்பபட்ட முதல் தகவல் இது தான் “lo”, இந்த இரு வார்த்தைகளை அனுப்பியவுடன் அந்த கணினி க்ராஷ் ஆனது. இந்த அரிய நிகழ்வை தான் உலக இணையதள தினமாக அனுசரிக்கப்படுகிறது.
இணையதளத்தில் 37% ஆபாசமாகவே உள்ளது
நாள் ஒன்றைக்கு 30,000 வெப்சைட்கள் ஹாக் செய்யப்படுகின்றன
இமய மலை போகும் பாதையில் தான் அதிவேக இன்டெர்நெட் உள்ளது
இணையதளத்தில் அதிக டிராபிக் ஏற்படுத்துவது கூகுள் மற்றும் மால்வேர்கள் தான்
அமெரிக்க ஊடகவியலாளர் இணையத்தில் போஸ்ட் செய்தமைக்காக 105 ஆண்டுகள் ஜெயில் தண்டனை அனுபவிக்கிறார்
நாள் ஒன்றைக்கு 1,00,000 .காம் டொமெயின்கள் பதிவு செய்யப்படுகின்றன
பிரிட்டனில் 9 மில்லியன் பேர் இணையத்தை பயன்படுத்தியதே கிடையாது
தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பிலிப்பைன்ஸில் தான் மிகவும் குறைவான இண்டெர்நெட் வேகம் இருக்கிறது
இணைய பயனாளிகள் நிமிடத்திற்கு 204 மில்லியன் மெயில்களை அனுப்புகின்றனர்
சீனாவில் கணினியை விட மொபைலில் இணையம் பயன்படுத்துவோர் அதிகம்
70 சதவீத ஈமெயில்கள் ஸ்பேமாகவே கருதப்படுகின்றன
No comments:
Post a Comment