Latest News

  

பெங்களூரில் மாதம் ஒரு பள்ளியிலாவது சிறுமிகள் பலாத்கார சம்பவம் அரங்கேறும் அவலம்


பெங்களூர்: பள்ளி சிறுமிகள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்படுவது பெங்களூரில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு மிகவும் அதிகரித்துள்ளது.

ஜனவரி: இரண்டு வயது 11 மாதங்களே நிரம்பிய பிரீ-ஸ்கூல் செல்லும் சிறுமி ஹெச்.எஸ்.ஆர் லேஅவுட் பகுதியில் தனது பள்ளிக்கு அருகே வைத்து வேன் டிரைவரால் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டார்.

ஏப்ரல்: மாணவிகளுக்கு பாலியல் சீண்டல் தந்ததற்காக, பெலந்தூர் பகுதியில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

ஜூன்: ஆர்டிநகரில் 6 வயது சிறுமி மதரசா ஒன்றில் ஆசிரியரால் பலாத்காரம் செய்யப்பட்டார். அதே மாதம், ஆனேக்கல் தாலுகா எல்லம்மனபாளையா பகுதியில் கித்தூர் ராணி சென்னம்மா பெண்கள், உறைவிட பள்ளி பிரின்சிபல் மல்லிகார்ஜுன் இதே புகாருக்காக கைது செய்யப்பட்டார்.

ஜூலை: மாரத்தஹள்ளியில் உள்ள பள்ளியொன்றில் ஆறுவயது சிறுமி ஸ்கேட்டிங் பயிற்றுநரால் பலாத்காரம் செய்யப்பட்டார்.அதே மாதத்தில் கனகபுரா சாலையிலுள்ள பள்ளியொன்றில், 8ம் வகுப்பு மாணவி உடற்கல்வி பயிற்றுநரால் பலாத்காரம் செய்யப்பட்டார்.

ஆகஸ்ட்: தலகாட்புரா பகுதியிலுள்ள பள்ளியில் ஓய்வு நேர ஆசிரியராக வேலை பார்த்த 63 வயது நபரால் 8 வயது சிறுமி பலாத்காரத்திற்குள்ளாக்கப்பட்டார்.

அக்டோபர்: 3வயது சிறுமி ஜாலஹள்ளி ஆர்க்கிட் பள்ளியில் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டார். இந்த வாரத்தில் இந்திராநகர் கேம்ப்பிரிட்ஜ் பள்ளி மாணவி பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.