ஹரியானாவில் முதல் முறையாக பாஜக ஆட்சியமைக்கிறது. காங்கிரஸை வீழ்த்தி தனிப்பெரும்பான்மையுடன் அக்கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது.
90 உறுப்பினர்களை கொண்ட ஹரியானா சட்டசபைக்கு தேர்தல் நடைபெற்றது. கடந்த 15ம் தேதி நடந்த வாக்குப்பதிவில் 73 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்நிலையில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. இதில் பாஜக 45 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது, 2 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இந்திய தேசிய லோக் தளம் 19 இடங்களிலும், காங்கிரஸ் 15 இடங்களிலும், பிற கட்சிகள் 5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
தேர்தல் கருத்துக்கணிப்புகளின்படி ஹரியானாவில் பல ஆண்டுகாலம் நடந்த காங்கிரஸ் ஆட்சிக்கு பாஜக முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இந்திய தேசிய லோக் தள தலைவர் ஓம் பிரகாஷ் சவுதாலாவின் பேரன் துஷ்யந்த் தான் போட்டியிட்ட தொகுதியில் தோல்வி அடைந்துள்ளார்.
இந்த தேர்தலில் தங்கள் கட்சி 40 இடங்களில் வெற்றி பெறும் என்று துஷ்யந்த் தெரிவித்தார். ஆனால் அந்த கட்சி வெறும் 19 இடங்களையே கைப்பற்றியுள்ளது.
No comments:
Post a Comment