மும்பை: சிவசேனாவுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட போதிலும் மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜக தான் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
பல ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சி செய்து வந்த மகாராஷ்டிராவில் அண்மையில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக தனது 25 ஆண்டுக கால கூட்டணி கட்சியான சிவசேனாவின் உதவியின்றி போட்டி இட்டுள்ளது. மகாராஷ்டிராவிலும் மோடி அலை வீசுகிறது என்பதை நிரூபிக்க பாஜக விரும்பியது.
தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. இதில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக இதுவரை 91 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் 32 இடங்களில் முன்னிலையில் உள்ளது. சிவசேனாவோ 47 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் 14 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
முன்னதாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தனது கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் தெரிவித்துள்ளதாவது, மகாராஷ்டிராவில் மோடி அல்ல அவரது அப்பாவால் கூட சிவசேனாவின் ஆதரவு இன்றி வெற்றி பெற முடியாது என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தான் பாஜக மகாராஷ்டிராவில் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
No comments:
Post a Comment