சென்னை: கிரானைட் சுரங்க முறைகேடு குறித்து விசாரிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலையில் 4 நாட்களுக்குள் குழு அமைக்கப்பட வேண்டும் என்றும், சகாயத்துக்கு விசாரணை முடியும் வரை ஆயுதம் தாங்கிய போலீஸார் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் நடந்த கிரானைட் மற்றும் கனிம மணல் கொள்ளை குறித்து விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி டிராபிக் ராமசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், கிரானைட் முறைகேடுகளை விசாரிக்க ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையில் குழு அமைத்ததோடு, விசாரணை அறிக்கையை அக்டோபர் 28ம் தேதிக்குள் (இன்று) தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடியாகிவிட்டது. இந் நிலையில் சகாயம் குழுவை அமைக்க உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றத்திலேயே அதை எதிர்த்து தமிழக அரசு மறு ஆய்வு மனு தாக்கல் செய்தது.
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்க முடியாது என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி சத்தியநாராயணனன் ஆகியார் அடங்கிய அமர்வு தெரிவித்துள்ளது.
ஆயுதம் தாங்கிய பாதுகாப்பு
மேலும் சுரங்க முறைகேடு குறித்து விசாரிக்க சகாயம் தலையில் 4 நாட்களுக்குள் குழு அமைக்கப்பட வேண்டும் என்றும், சகாயத்துக்கு விசாரணை முடியும் வரை ஆயுதம் தாங்கிய போலீஸார் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
நிதியை ஒதுக்குக
விசாரணைக்கு தேவையான நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
அரசுக்கு உத்தரவு
தற்போதுள்ள அறிவியல் மைய பொறுப்பிலிருந்து அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிளாஷ்பேக்:
கிரானைட், தாதுமணல் கொள்ளை குறித்து விசாரிக்க சகாயத்தை தேர்வு செய்தது ஏன்?: நீதிபதிகள் விளக்கம்
போலீசாரின் வீட்டுமனைகளையே மிரட்டி வாங்கிய பி.ஆர்.பி. ஸ்கூல் பிள்ளைகளுக்கு க்விஸ் போட்டி நடத்தும் வேலையில் உட்கார வைக்கப்பட்ட சகாயம்!
லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்தும் சகாயம் ஐ.ஏ.எஸ்!... நேர்மையின் மறுபக்கம்!!
பெயர்: பி.ஆர்.பி என்கிற பழனிச்சாமி.. வழக்குகள் எண்ணிக்கை 13!
No comments:
Post a Comment