நேபாள நாட்டில் உள்ள மலைச்சிகரத்தில் ஏறி ஆறு வயது இந்திய சிறுவன் உலக சாதனை படைத்துள்ளான். மலை ஏறும் வீரரான ராஜீவ் சவுமித்ரா என்பவரின் மகன் ஹர்ஷித் சவுமித்ரா என்ற 6 வயது சிறுவன் தான் இந்த சாதனையை புரிந்துள்ளான். இந்த மலைச்சிகரம் 5,554 மீட்டர் உயரமானது.
இதில் ஏறுவதற்காக அவன் தனது தந்தை மற்றும் 2 வழிகாட்டிகளுடன் சென்றான். கடந்த 7ம் திகதி எவரெஸ்ட் மலை முகாம் வரை ஹெலிகாப்டரில் சென்று இறங்கினான்.
அங்கிருந்து 10 நாட்களில் அவன் கல்பதரு சிகரத்தில் ஏறி சாதனை புரிந்தான். இதற்கு முன்னர் பாலாஜி என்ற 7 வயது இந்திய சிறுவன் கல்பதரு சிகரத்தில் ஏறியது தான் சாதனையாக இருந்தது. அதனை ஹர்ஷித் முறியடித்துள்ளான்.
இந்த சாதனை லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெறுகிறது. கின்னஸ் சாதனைக்காகவும் இந்த ஆதாரங்களை அனுப்ப உள்ளதாக அவனது தந்தை தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment