உலகமெங்கும் நகலெடுக்க பயன்படும் ஜெராக்ஸ் இயந்திரம் மனித வாழ்வில் பிரிக்க முடியாதவை ஆகி வி ட்டது. ஆனால் அந்த ஜெராக்ஸ் இயந்தி ரத்தை கண்டுபிடிக்க செஸ்டர் கார்ல் சன் எனும் தனி மனிதனுக்கு முப்பது வருடங்கள் ஆயிற்று இடைப்பட்ட கால த்தில் செஸ்டர் கார்ல்சன் பட்ட அவமா னங்களும் துயரங்களும் சொல்லில்
அடங்காதவை.
1906 ஆம் ஆண்டு அமெரிக்காவின் கலிபோர் னியா மாநிலாத்தில் ஒரு வறுமை குடும்பத்தி ல் பிறந்த செஸ்டர் கார்ல்சன் பகுதி நேரம் உழைத்து இயற்பியலில் பட்டம் பெற்றார் த னது குடும்பத்தின் வறுமையை போக்க பல இ டங்களில் பணியாற்றினார் “பேடண்ட்” துறை யில் பணியாற்றியபோது கார்ல்சனுக்குதனது அலுவலகத்தில் நகலெடுக்க பட்ட கஷ்டங்க ளை பார்த்துநகலெடுக்கவேண்டியதாளை ஒரு கருவி மேலே வை த்தால் ஈரம் படாமல் நகல் வந்து விழுந்தால் எப்படி இருக்குமென்று ஜீ பூம்பா கணக்கில் யோசித்தார் தனது யோசனையை அலுவலக ந ண்பர்களிடம் சென்னார் ஒட்டு மொ த்த அலுவலகமோ கைகொட்டி சிரி த்தது தனது யோசனையை நடை முறைபடுத்தப் போகிறேன் என்று சொன்னதிற்கு பெரியபெரிய விஞ் ஞானிகள் எல்லாம் முயற்சித்து தோற்றுவிட்டனர் உனக்கென் ன பைத்தியம் பிடித்து விட்டதா என ஏளனம் செய்தனர் .
கையிலோ காசில்லை ஆனாலும் தனது சிந்தனையின் மேல் அபார நம்பிக்கை கொ ண்டு இருந்தார் அவருடைய நல்ல காலம் ஒளிமின் நிகழ்வு ( photo electricity) அவ ருடைய கவணத்தை ஈர்த்தது இருட் டாக இருக்கும் போது மின்சாரம் பாயமல் தடுக் கும் இயல்பு கொண்ட சில பொருள்களின் மீது ஒளிக்கதிர்கள் படும்போது அவைகள் மின்சாரத்தை கடத்தும் இது ஒளிமின் நிக ழ்வு அது போல முடி, பட்டு த்துணி, எண் ணைதோய்த காகிதம் ஆகியவற்றை அழுத் தி தேய்தால் நிலை மின்சாரம் உண்டாகும் இந்த இரண்டு நிகழ்வுகளையும் இணைத்து நகலெடுக்கும் கருவிக் கு வடிவம் கொடுத்தார் செஸ்டர்கார்ல்சன். கருவியின்மேற்பரப்பில் தகடு ஒன்றில் ஒளி உணர் பொருளினால் பூச்சு ஏற்ப டுத்தி அதில் நிலை மின்சா ரத்தை ஏற்படுத்தி அதற்கு மேல் நகலெடுக்க வேண் டிய ஒளிஊடுருவும்தாளை வைத்து அதன் வழியே ஒ ளியை பாய்ச்சினார் தாளி ன் எழுத்துகள் இல் லாத வழியே ஒளி பாய்ந்தது அதற்கு அடியில் உள்ள தக ட்டில் ஒளி பட்டதும் நிலைமின்சாரம் அகன்று விட்டது எனவே இந்த அமைப்பை அப்படியே ஒரு தாளில் பதிய வைத்து வெற்றியும் பெற் றார் அக்கருவிக்கு உரிமமும் பெ ற் றார்
தனது கருவியை 1938 இல் சந் தைக்கு அறிமுகம் செய்தார் . பார் பதற்கு காம , சோமா வென்ற கரு வி தெளிவில்லாத எழுத்துகள் , ஒளி ஊடுருவும் தாளில் இருந்தா ல் மட்டுமே நகலெடுக்க முடியும் சாதாரண தாள்களை நகலெக்க முடியாது போன்ற பல காரணங்க ளால் கருவி தோல்வி அடைந்து விட்டது கருவியில் உரிய மாற்றங் களை செய்ய வேண்டும் அதற்கு பணம் நிறைய வேண்டும் எல்ல நி றுவனங்களும் கார்ல்சனை கிண்ட லடித்தார்களே தவிர யாரும் உதவ முன் வரவில்லை இதற்க்கிடையில் இரண்டாம் உலகபோர் தொடங்கி விட்டதுதான் பட்டபாடெல்லாம் வீணாகி விடுமோ என்ற அச்சம் கார்ல்சனுக்கு தோன்றி விட்டது.
எதிர்பாரத விதமாக நியூயார்க்கை சேர்ந்த ஹோலாய்ட் கார்பரேஷ ன் என்ற நிறுவனத்தை நடத்தி வந்த வில்சன் என்பவர் பண உதவி செய்ய முன் வந்தார் சாதாரண தாளினை நகலெடுக்கும் இயந்திரத் தை கண்டுபிடிக்க ஹோலாய்ட் கார்பரேஷன் பல லட்ச கணக்கான டாலர்களை செலவிட்டதால் பண மின்மையால் நகலெடுக்கும் கரு வியை முழுமையடையாமலே 1950 இல் வெளிட்டது மீண்டும் செ ஸ்டர் கார்ல்சனுக்கு தோல்வி இருப்பினு ம் லித்தோகிராபிக் அச்சுத் துறைக் கும் இராணுவதில் பெரிய வரைபட ங்களை நகலெடுக்க உதவியதால் செஸ்டர் கார்ல்சனின் கருவி இந்த முறை தப்பித்தது
பல வித இடர்பாடுகளுக்கு பின் 1960 ஆம் ஆண்டு மார்ச் மாதம் “ ஜெ ராக்ஸ் 914 “ சந்தைக்கு வந்தது இருப்பினும் பெரிய நிறுவனங்கள் யாரும் ஆதரவு தராததால் ஹோலாய்ட் கார்பரேஷன் வாடிக்கையா ளர்களுக்கு நேரிடை யாகவே வாடகைக்கு விட்டது கருவி யின் விரைவான நகலெடுக்கும் தன் மையும், நகல் எழுத்துகளின் துல்லிய மும் வாடிக்கையாளர்களை கவர்ந்து விடவே ஹோலாய்ட் கார்ப ரேஷனுக்கு ஆர்டர்கள் குவிந்தன நிறுவனத்தின் பங்கு மதிப்பு எக்கச்சக்கமாக உயர்ந்தது செஸ்டர் கார்ல்சனுக்கு உரிமைத்தொகையா க மட்டும் இரண்டரை கோடிக்கும் அதிகமான டாலர்கள் கிடைத்தது கடைசியில் ஜெராக்ஸ் இயந்திரம் மட்டும் ஜெயிக்க வில்லை அதை கண்டுபிடித்த ஒரு சராசரி மனிதன் வரலாற்றின் பக்கங்களில் விஞ் ஞானியாக பதிவு செய்யப்பட்டான்
No comments:
Post a Comment