சென்னை: கச்சத்தீவில் தமிழக மீனவர்களுக்கு மீன்பிடிக்க உரிமை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. கச்சத்தீவில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க அனுமதிக்கவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மீனவர் பேரவை சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கு பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ஏற்கனவே ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அளித்த பதில் மனுவில் தமிழக மீனவர்களுக்கு எதிரான கருத்தை கூறியிருந்தது. தற்போது புதிதாக பதவியேற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணி அரசும் புதிதாக கூடுதல் பதில் மனுவை இன்று தாக்கல் செய்துள்ளது. அதில் கச்சத்தீவில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க உரிமையில்லை; அதே சமயம் அங்கு மீனவர்கள் தங்கள் வலைகளை உலர்த்திக்கொள்ளவும், ஓய்வெடுத்துக் கொள்ளவும் உரிமை உண்டு; 1974-76 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் படி இந்திய மீனவர்களுக்கு இந்த பராம்பரிய உரிமை உள்ளது. தமிழக மீனவர்கள் மீது இலங்கை ராணுவம் தாக்குதல் நடத்துவதை அந்நாட்டு அரசு நியாயப்படுத்தக் கூடாது என்று கூறியுள்ளது. இது தமிழக மீனவர்களிடையே பெருங்கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒட்டுப்போட்ட ஏமாளிகளே! இது தான் ஆப்கி பார் மோடி சர்க்கார்
ReplyDelete