வடமேற்கு பாகிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் முகாம்கள் மீது அமெரிக்க ஆளில்லா விமானம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 15 உஸ்பெக் தீவிரவாதிகள் பலியானார்கள். பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ள பழங்குடியின பகுதியான வடக்கு வசிரிஸ்தானில் தலிபான் மற்றும் பல்வேறு தீவிரவாத குழுக்களின் முகாம்கள் உள்ளன. இந்த முகாம்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் தொடர் தாக்குதல் நடத்தி அழித்து வருகிறது. இதற்கிடையில், நேற்று இந்த பகுதியில் அமெரிக்க ஆளில்லா விமானங்கள் தாக்குதல் நடத்தின. வடக்கு வசிரிஸ்தானின் மீரான்ஷா, மிர் அலி நகரங்கள் மீது ஆளில்லா விமானங்கள் குண்டுகளை வீசின. ஜோய் சையத்கய் பகுதியில் தீவிரவாதிகளின் முகாம்கள் மீது 2 ஏவுகணைகள் வீசப்பட்டன. இந்த தாக்குதலில் 15 உஸ்பெக் தீவிரவாதிகள் உட்பட 20 பேர் பலியானதாக பாகிஸ்தான் ராணுவ மூத்த அதிகாரி தெரிவித்தார்.
சையத்கய் பகுதியில் நேற்றிரவு தீவிரவாத குழுக்களின் கூட்டம் நடைபெறுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, ஆளில்லா விமானம் மூலம் அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. பாகிஸ்தானில், அரசு மற்றும் தலிபான் தீவிரவாதிகள் இடையேயான பேச்சுவார்த்தைக்காக, 6 மாதங்களாக அமெரிக்க போர் விமானங்கள் தாக்குதல் நடத்தாமல் இருந்தன. இந்நிலையில் கடந்த மாதம் முதல் மீண்டும் அமெரிக்க விமானங்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன.
No comments:
Post a Comment