தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த எண்ணெய்க் கப்பல் ஒன்று கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து காணாமல் போனதால் அது கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்து நாட்டு டீசல் எண்ணெய்க் கப்பல் எம்.டி. ஆரபின் – 4 சிங்கப்பூர் கடல் முனையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டு அதிகாரிகளுடனான தொடர்பை இழந்தது.
இந்தக் கப்பல் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டிருக்கலாம் என்று சர்வதேச கடல் முனையம் தெரிவித்துள்ளது. சிங்கப்பூரில் இருந்து மலேசியா வழியாக இந்தோனேசியா நோக்கி பயணித்த இந்தக் கப்பலில் 14 பணியாளர்கள் இருந்தனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேபோன்று கடந்த ஏப்ரல் மாதம் மலேசியாவில் ஒரு எண்ணெய்க் கப்பல் கடத்தப்பட்டது. அதிலிருந்து சுமார் 3 மில்லியன் லிட்டர் டீசல் திருடப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் இக்கப்பல் காணாமல் போயுள்ள இடம், மலேசிய விமானம் காணாமல் போனதாக இறுதியாக அறியப்பட்ட இடம் என்பதும் பல்வேறு சந்தேகங்களைக் கிளப்பியுள்ளது.
No comments:
Post a Comment