டெல்லி: தமது தலைமையிலான அமைச்சரவையில் யார் யாருக்கு என்னென்ன துறைகள் ஒதுக்கீடு செய்வது என்பது தொடர்பாக இறுதி முடிவெடுக்க முடியாமல் நரேந்திர மோடி திணறிக் கொண்டு இருக்கிறார். இந்த விவகாரத்தை முடிவுக்கு கொண்டு ஆர்.எஸ்.எஸ். இயக்க தலைவர்களுடன் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். தேர்தலில் வென்ற நரேந்திர மோடி நாளை பாஜக எம்.பி.க்கள் கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார். அதைத் தொடர்ந்து பதவியேற்பு நாளும் நாளையே அறிவிக்கப்பட இருக்கிறது.
அதற்குள் அமைச்சரவையை முடிவு செய்துவிடுவதில் மோடி படுதீவிரம் காட்டி வருகிறார். மோடியை நேற்று கர்நாடக முன்னாள் முதல்வர் எதியூரப்பா சந்தித்துப் பேசினார். தமக்கு அமைச்சரவையில் எதியூரப்பா இடம் கேட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பரபர சந்திப்புகள்
எதியூரப்பாவுடனான சந்திப்பைத் தொடர்ந்து அமித் ஷா, தர்மேந்திர பிரதான் ஆகியோருடன் மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது பீகார் அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அத்வானியின் வீட்டுக்குப் போய் ஆலோசனை நடத்தினார் மோடி. பின்னர் மற்றொரு மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷியையும் மோடி சந்தித்தார்.
மோடியிடம் முக்கிய இலாக்கள்
தற்போதைய தகவல்களின் படி சில முக்கிய இலாக்கள் பிரதமராகும் மோடி வசம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
அத்வானிக்கு இடம் இல்லை..
கட்சியின் மூத்த தலைவரான அத்வானிக்கு அமைச்சரவையில் இடம் இருக்காது என்று தெரிகிறது.
அருண் ஜேட்லி
லோக்சபா தேர்தலில் தோல்வி அடைந்த போதும் அருண் ஜேட்லியை நிதி அமைச்சராக்க மோடி விரும்புவதாக தெரிகிறது.
சுஷ்மாவுக்கு வெளியுறவு..
தமக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் பதவிதான் வேண்டும் என்று சுஷ்மா ஸ்வராஜ் அடம்பிடித்துக் கொண்டிருப்பதால் அத்துறைதான் அவருக்கு வழங்கப்படக் கூடும்.
மனோகர் பாரிக்கருக்கு
உள்துறை உள்துறை அமைச்சர் பொறுப்பு கோவா முதல்வர் மனோகர் பார்க்கருக்கு கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
ராஜ்நாத்சிங்
பாஜக தலைவர் ராஜ்நாத்சிங், பாதுகாப்பு அமைச்சராகிறார்.
அருண் ஷோரி
73 வயதாகும் மூத்த பத்திரிகையாளர் அருண் ஷோரியை வர்த்தகத்துறை அமைச்சராக்க மோடி முடிவு செய்திருக்கிறார்.
சபாநாயகராக முரளி மனோகர் ஜோஷி
பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான முரளி மனோகர் ஜோஷி சபாநாயராக வாய்ப்பிருக்கிறது.
அமித்ஷா மோடியின் வலதுகரமான அமித் ஷா, பிரதமர் அலுவலக இணை அமைச்சராக்கப்படுகிறார்.
ராஜிவ் பிரதாப் ரூடி விமானப் போக்குவரத்து துறை ராஜிவ் பிரதாப் ரூடி வசம் போகிறது.விமானப் போக்குவரத்து துறை ராஜிவ் பிரதாப் ரூடி வசம் போகிறது.
ரவி சங்கர் பிரசாத் அதேபோல் பாஜக செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத்துக்கு சட்ட அமைச்சர் தரப்படுகிறது
ஹர்ஷவர்த்தன் டெல்லி பாஜக தலைவர் ஹர்ஷவர்தனுக்கு சுகாதாரத்துறை அமைச்சகம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
இன்றும் சந்திப்புகள்.. இந்த பட்டியல் ஒருபக்கம் இருக்க டெல்லியில் பாஜக தலைவர்கள் தொடர்ந்து "சந்திப்புகளை" நடத்தி வருகின்றனர். இன்று காலை ராஜ்நாத்சிங்கை சுஷ்மா ஸ்வராஜ் சந்தித்தார். அதைத் தொடர்ந்து மோடியையும் சுஷ்மா சந்தித்துப் பேசினார்.
ஏன் சந்திப்புகள்.. இந்த சந்திப்புகளில் தங்களுக்கான துறை மட்டுமல்ல.. தமது ஆதரவாளர்களுக்கும் அமைச்சர் பதவி கேட்டு லாபி செய்வதுதான் முதன்மையாக இருக்கிறதாம். இதனாலேயே இன்னமும் மோடி அமைச்சரவையில் உறுதியாக யார் யாரெல்லாம் இருப்பார்கள் என்று முடிவுக்கும் வர முடியவில்லையாம். அவ்வளவு அக்கப்போராக இருக்கிறதாம்.
ஆர்.எஸ்.எஸ். அத்துடன் பாஜக தலைவர்கள் அமைச்சர் பதவிக்கு மோதிக் கொள்வதைப் போல முக்கிய சில துறைகளுக்கு தாங்கள் பரிந்துரைக்கும் சிலரைத்தான் அமைச்சராக்க வேண்டும் என்கிறதாம் ஆர்.எஸ்.எஸ். இயக்கம். அத்வானி ஆதரவாளரான அனந்தகுமார் இப்போது ஆர்.எஸ்.எஸ். லாபியில் மத்திய அமைச்சர் பதவியைப் பெற முயற்சித்து வருவதாகவும் டெல்லி வடார தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆர்.எஸ்.எஸ்.தலைமையகத்தில் மோடி இதனிடையே டெல்லியில் ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்துக்கு ராஜ்நாத்சிங், அருண் ஜேட்லியுடன் மோடி இன்று பகல் சென்று ஆலோசனை நடத்தியிருக்கிறார்.
மோடியின் பார்முலா மோடியைப் பொறுத்தவரையில் நாடு விடுதலைக்குப் பின்னர் பிறந்தவர்கள் குறிப்பாக 1950க்குப் பின்னர் பிறந்தவர்களுக்குத்தான் அமைச்சரவையில் இடம் கொடுக்க வேண்டும் என்கிறாராம். இதை ஆர்.எஸ்.எஸ்.-ம் ஏற்று வயதானவர்கள் அமைச்சரவையில் இருக்க வேண்டாம் என்றும் கூறியிருக்கிறதாம். இன்னும்
No comments:
Post a Comment