சிரியாவில் உள்நாட்டுப்போர் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், அங்கு அடுத்த மாதம் 3 ஆம் தேதி பொதுத்தேர்தல் நடத்தப்படும் என அதிபர் பஷார் அல்ஆசாத் அறிவித்துள்ளார். இதற்கு கிளர்ச்சியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த பிறகும், அங்கு தேர்தல் பிரசாரப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் அங்குள்ள டெரா பகுதியில் நேற்று முன்தினம் தேர்தல் பிரசார கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக போடப்பட்டிருந்த பந்தலில் அதிபரின் ஆதரவாளர்கள் ஏராளமானோர் குவிந்திருந்தனர். அவர்கள் அதிபருக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பியும், நடனமாடியவாறும் இருந்தனர்.
அப்போது அங்கு வந்த கிளர்ச்சியாளர்கள் அந்த பந்தலில் சிறிய ரக பீரங்கிகளால் தாக்குதல் நடத்தினர். இதில் குழந்தைகள் உள்பட 22 பேர் கொல்லப்பட்டதாக கிளர்ச்சியாளர்கள் அறிவித்தனர். ஆனால் இந்த தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டதாகவும், 205 பேர் படுகாயமடைந்ததாகவும் அரசு தொலைக்காட்சி ஒன்று தெரிவித்தது.
No comments:
Post a Comment