கடந்த சில மாதங்களாக இந்திய அரசு அதிகாரி வட்டத்தில் உள்ள பல உயர் அதிகாரிகள் பாஜகவில் இணைந்து வருவது தொடர்கதையாகி வருகிறது . சில நாட்களுக்கு முன்னர் இந்திய ராணுவத்தின் முன்னாள் ராணுவத் தளபதி வி.கே.சிங் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.
கடந்த வாரம் இந்திய உளவுப்பிரிவான ‘ரா’வின் முன்னாள் தலைவர் சஞ்சீவ் திரிபாதி பா.ஜ.கவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் மிக உயர்ந்த அதிகாரப்பூர்வ பதவிகளை அலங்கரித்த பிறகு அண்மைக் காலமாக பா.ஜ.கவில் இணையும் ஐந்தாவது நபர் வி.கே.சிங் ஆவார்.
இதற்கு முன்னர் முன்னாள் உள்துறை செயலாளர் ஆர்.கே.சிங், முன்னாள் பெட்ரோலியம் செகரட்டரி ஆர்.எஸ்.பாண்டே,
இஸ்ரத் ஜஹான் கொலை வழக்கு சிறப்பு புலனாய்வு அதிகாரி சத்யபால் சிங் மோடி விழாவில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது..இவர் தான் இஸ்ரத் ஜகான் போலி என்கவுண்டர் கொலைவழக்கின் அதிகாரி.மோடி இவ்வழக்கில் எப்படி தப்பித்தார் என்பதற்கு இது ஒன்றே போதுமான காரணம்..
அடுத்து இந்தியாவிற்கான ஐ.நாவின் முன்னாள் நிரந்தர பிரதிநிதி ஹர்தீப் சிங் பூரி அண்மையில் பாஜகவில் இணைந்தார்
கடந்த சில வருடங்களாக அதிகார மட்டங்களில் ஹிந்துத்துவா மயமாவது குறித்து எழுந்துள்ள குற்றச்சாட்டுக்களை உறுதிப்படுத்துவதாக ஓய்வு பெறும் முக்கிய அதிகாரிகள் கூட்டத்தோடு பா.ஜ.கவில் இணைவது அமைந்துள்ளது.இன்னும் காலம் போகப்போக இன்னும் எத்தனை ஹிந்துத்துவ வாதிகள் பாஜகவுக்காக அரசு பீடங்களில் வேலை பார்த்தனர் என்பது வெளிவரப்போவது மட்டும் உண்மை..
இவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்திருக்கும் போது இவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த அரசு இயந்திரங்களை எந்த அளவுக்கு ஆர் எஸ் எஸ் க்கும் பாஜகவுக்கும் பயன்படுத்தி இருப்பார்கள்..மேலும் உளவுத்துறை அதிகாரியாக இருந்திருக்கும் போது இவர்கள் எவ்வளவு போலியான தகவல்களை பரப்பியிருப்பார்கள்.. எப்படி பல மக்களை முட்டாள் ஆக்கி இருப்பார்கள்
தற்பொழுது சிறைக்குள் கம்பி எண்ணிக்கொண்டிருக்கும் தீவிரவாதிகள் அசிமானந்தா , பிரக்யா சிங் , கர்னல் புரோகித் இன்னும் பல ஆர் எஸ் எஸ் உள்ளிட்ட ஹிந்துத்துவ இயக்கங்களின் பயங்கரவாத செயல்கள் மறைத்திருப்பார்கள் .எத்தனை அப்பாவி மக்களை போலியான குண்டு வெடிப்பு வழக்குகளில் சிக்க வைத்திருப்பார்கள் என்பது நீதமான விசாரணையின் மூலம் கண்டு பிடிக்க வேண்டிய முக்கிய வினாக்கள்?? மற்றும் நம் நாடு எதை நோக்கி பயணிக்கிறது என்பது மிகுந்த அச்சத்தை பலரிடம் எழுந்து உள்ளது என்று சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்
தமிழ் கதிர்
No comments:
Post a Comment