நாடாளுமன்றத்திற்காக பலமுனை போட்டியில் இருக்கும் அனைத்துறுப்பினர்களுக்கும் ஓர் வேண்டுகோள்; தாங்கள் அனைவரும் அந்தந்த தொகுதியிலிருந்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வென்று தமிழகத்திற்கு என்னென்ன சாதிக்க போகிறீர்களோ அது ஒருபுறம்:!!!
இந்த தமிழகத்தின் மத்தியில் அமைந்திருக்கும் திருச்சி; இந்த மாநகரத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்பதுதான் திருச்சியிலும் மற்றும் அதனை சுற்றியுள்ள பல மாவட்டங்கள் இன்னும் அதனை சார்ந்திருக்கும் கிராமங்களின் மக்கள் எதிர்பார்க்கும் நீண்ட நெடு நாள் ஆசை மற்றும் சௌவ்கரியம்.
எதிர் வரும் தேர்தலுக்கு பிறகு தமிழகத்தின் நாடாளு மன்ற உறுப்பினர்கள் இதனை செய்வார்களா என்பதும் சந்தேகம். காரணம்;அரசியல் லாப நோக்கு பின்னிபினைந்திருக்கிறது திருச்சி சர்வதேச விமான நிலைய ஓடுபாதை (Runway – Extension) விஸ்தரிப்பு!!!!!
திருச்சி, புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், சேலம், கரூர், ஈரோடு,திருப்பூர், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர்,கடலூர், நாகை, மயிலாடுதுறை, பட்டுக்கோட்டை,இன்னும் சிற்றூர்கள் கிராமங்கள் என பல இடங்களிலிருந்து, வெளிநாட்டில் பிழைப்பு நடத்தி பொருளீட்டு தன் சொந்த தாய் நாட்டிற்கு வரும்போது சென்னையிலோ அல்லது கொழும்பு வழியாக திருச்சிக்கோ விமானம் மூலம் வந்திறங்குகிறார்கள். வெளிநாட்டில் உழைக்கும் வேதனையைவிட இப்படி அலைந்து அசந்துபோய் தன் வீடு வந்து சேர்வது மிக கொடிய வேதனை. பல முறை டில்லி சர்வ தேச விமான நிலைய தலைமை கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கும் கடிதம் அனுப்பப்பட்டது. அவர்களது பதில் திருச்சி ஏற்கனவே சர்வ தேச விமான நிலையமாகிவிட்டது. என்பது மட்டும்தான். முழுக்க முழுக்க கணினிமயமாக்கப்படவில்லை ஓடுபாதை என்கிற ரன்வே குறைந்தது நீளம் 1000 மீட்டரிலிருந்து1200 மீட்டர் வரை இருக்கவேண்டும். வளைகுடா விமானங்கள் 777-747 போயிங் ஏர்பஸ் விமானங்களின் நீள அகலம் அதன் இயந்திர வடிவமைப்பின் அதிர்வு திறன் Boeing 777 aircraft backbone Description:- Wingspan212ft.7inches / 64.8 m Length 242ft. 4inches / 73.9m Height 61ft. 5inches / 18.6m Cabin Width 19ft. 3inches / 5.86m Engines GE90-115BL1 Thrust 115540 lbs. Cruising Altitude43100ft.
திருச்சி விமான தளத்தில் தரையிறங்க அவ்விமான தளம் போதுமானதாக இல்லை என்பதுதான் நிதர்சனம்.
இப்பிரச்சனைக்கு டில்லியில் கூறும் விளக்கம்;தமிழக அரசின் உள் கட்டமைப்பை சார்ந்தது;எனவே தமிழக அரசு மத்திய அரசுடன் இணைந்து நம் நாட்டு சர்வ தேச விமான நிலைய கட்டுப்பாட்டு உயர் மட்ட அதிகாரிகளுடன் பேச்சு நடத்தி இதற்க்கான ஆணை பிறப்பிக்க வேண்டும். அதற்கு முன் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட நிலங்கள் தனியார்களால் கையகபடுத்தப்பற்றிருக்கிறது; திருச்சி விமான நிலைய ஓடுபாதையை சுற்றி நிலங்கள், அந்த நிலங்களை மீட்டு ஆவண செய்ய வேண்டும்.
இதற்கு தமிழக எம் பி க்களின் பங்கு பெரிதும் உதவியாக இருக்கும். இதற்குமுன் மறைந்த திரு ரெங்கராஜன் குமாரமங்கலம் திருச்சி எம் பி யாக இருந்து அவருக்கென்ற பணிகளை ஓரளவு செம்மையாக செய்தார். அவருக்கு பிறகு யாரும் திருச்சியை இன்னும் சரிவர செய்ய வில்லை. சும்மா அரசியல்வாதிகள் ஹெலிகாப்டரில் வந்திறங்க திருச்சியை மையமாக வைத்துகொண்டார்கள்.
சவூதி, குவைத், பஹ்ரைன், கத்தார், ஏமன், ஓமன்,துபாய், போன்ற நாடுகளிலிருந்து திருச்சிக்கு நேரடி விமான சேவை எட்டாக்கனிதான்.
சேது சமுத்திர திட்டத்தையும், இதற்கு ஒப்பிடலாம்:-
உதாரணத்திற்கு, புதுகோட்டையை சேர்ந்த ஒருவரும் திண்டுக்கல்லை சேர்ந்த ஒருவரும் குவைத்திலிருந்து இரண்டு ஆண்டுகள் கழிந்து அவர்தம் ஊருக்கு வருவதாய் இருந்தால், ஒன்று அவர்கள் சென்னைக்கு விமான டிக்கெட் எடுக்க வேண்டும். அப்படி எடுத்தால் அவர்கள் சென்னைக்கு வர நேரடி விமானமாக இருந்தால் விமான பயணம் 6 மணிநேரம் பின்பு காரில் சென்னையிலிருந்து அவர்கள் ஊருக்கு 6மணிநேரம் மொத்தம் 12 லிருந்து 15 மணிநேரம் அவர்கள் அவர்களுடைய வீடு வந்து சேர்வதற்கு;
இரண்டு; அவர்கள் இருவருமே திருச்சிக்குத்தான் டிக்கெட் எடுத்து கொள்கிறார்கள் அதுவும் ஸ்ரீலங்கன் விமான சேவையில், அவர்கள் குவைத்திலிருந்து கொழும்பு 6 மணிநேரம் பிறகு கொழும்பிலிருந்து திருச்சிக்கு வந்திறங்க கொழும்பில் அடுத்த விமானத்திற்காக அவர்கள் தங்கிய நேரம் 2 மணிநேரம், 2 மணிநேர பயணம் திருச்சி விமான நிலையத்தை விட்டு வெளியே வர2 மணிநேரம் பின்பு காரில் அவர்கள் வீட்டிற்கு 3மணிநேரம் மொத்தம் அவர்கள் வீடுபோய் சேர 18அல்லது 20 மணிநேரம்.
அரசியல் என்றால் தொழில்துறை என்றளவிற்கு ஆகிவிட்டது ;பிசினெஸ் ; முதல் போட்டு லாபம் என்கிற பெயரில் காசு சம்பாதிப்பது.
திருச்சிக்கு வளைகுடா நாட்டு நேரடி விமான சேவைக்கு வான் வழி பாதை அமைக்க இந்த எம் பி க்கள் தகுந்த முயற்சி மேற்கொண்டால், உதாரணத்திற்கு எடுத்துக்கொண்ட, புதுக்கோட்டை, திண்டுக்கல் மக்களுக்கு எத்துணை எண்ணிலடங்கா மட்டற்ற மகிழ்ச்சி என்பதை இனி விளக்க அவசியமில்லை. குவைத் திருச்சி நேரடி விமானம் வந்தால் அவர்களுடைய வீடுவரை மொத்த பயண நேரம் 7 அல்லது 8மணிநேரம்தான்.
சவூதி, துபாய் மற்றும் குவைத் விமான வான் வழி துறையிடம் தொடர்பு கொண்டபொழுது,அவர்கள் Green Signal-உடன் அவரவர் நாட்டிலிருந்து திருச்சிக்கு நேரடி விமான வான் வழி பாதைக்காக காத்துகொண்டிருக்கிறார்கள். ஒரு வேளை நம் இந்திய நாடு வல்லரசாகிவிட்டதோ?!?!?!
கேவலம் கேரளாவை எடுத்துக்கொண்டால் தமிழகத்தை விட மிக சிறிய பரப்பளவு கொண்ட மாநிலம் 20 எம் பிக்கள்தான். அவர்கள் முயற்சி எங்கே நம் முயற்சிகள் எங்கே பார்ப்போம் ஆஹா!!! கொச்சி, திருவனந்தபுரம், கோழிக்கோடு முக்கனிகளாக மூன்று சர்வ தேச விமான நிலையம் என்றுமட்டுமல்ல அம்மூன்று விமான தளங்களிலும் அனைத்து அரபு நாட்டு விமானங்களும் மிக சர்வசாதாரணமாக அனுதினமும் வந்திறங்கி செல்கின்றது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்ஸில் தமிழர்களை நடத்தும் விதமும் மிகவும் கேவலமாக இருப்பது மிக கொடுமையாக இருக்கிறது. தமிழர்களுக்கு இலங்கை நாட்டு விமானத்தில் ஏறுவதற்கு சொல்லிலடங்கா அறுவருப்பும் ஒரு முக்கிய காரணமாகும். வளைகுடாக்களிலிருந்து ஒவ்வொரு நாட்டு விமானம் ஒவ்வொரு நாள் திருச்சிக்கு வந்திறங்கினாலே போதும் திருச்சி கலைக்கட்டிவிடும் அரசாங்கத்திற்கும் எத்தனையோ கோடி ஆண்டு வருமானத்தை பார்க்கலாம். திருச்சி, சென்னை மற்றும் டில்லி விமான நிலைய உயர் மட்ட அதிகாரிகள் இதற்க்கான ஏற்பாட்டில் இறங்குவார்களா?!?!?திருச்சி பக்கம் அரசு செவி சாய்க்குமா??? Committee of International Airport Traffic Authority of India துரித செயல்பாட்டில் இறங்குமா?!?!?
நன்றி:
குவைத்திலிருந்து......
என்றென்றும்,அன்புடன்
இக்பால் அஹ்மத். J
தகவல் அதிரை அல்மாஸ்
No comments:
Post a Comment