ஜப்பானில் உள்ள ஃபுகுஷிமா அணு உலையில் கதிரியக்கம் தோய்ந்த நீரை சுத்திகரிக்கும் அமைப்பில் ஏற்பட்ட கோளாறால், நீரை சுத்திகரிக்கும் பணியை நிறுத்தி வைத்துள்ளதாக அந்த அணு உலையை நிர்வகிக்கும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து டோக்கியோ மின் சக்தி நிறுவனத்தின் (TEPCO) செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:
மேம்படுத்தப்பட்ட திரவ பதப்படுத்தும் அமைப்பில் உள்ள ஒரு தொட்டியில் கசிவு ஏற்படுவதை பணியாளர்கள் திங்கள்கிழமை கண்டுபிடித்ததையடுத்து சுத்திகரிக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கதிரியக்கம் தோய்ந்த சுமார் 8 லிட்டர் நீர் கசிந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இருப்பினும் அவை அனைத்தும் மீண்டும் தேக்கி வைக்கப்பட்டதால் பாதுகாப்பு இடர் குறித்த அச்சம் ஏதும் இல்லை என்று அவர் கூறினார்.
2011 ஆம் ஆண்டு சுனாமியால் பாதிக்கப்பட்ட அணு உலைகளை குளிர்விக்கப் பயன்படுத்தப்பட்ட நீரில் உள்ள கதிரியக்கத்தை சுத்திகரிக்கும் இந்தப் பணி,
தொடக்கம் முதலே பல்வேறு கோளாறுகளால் பல முறை நிறுத்தி வைக்கப்பட்டது. ஃபுகுஷிமா அணு உலை வளாகத்தில் சுமார் 4,36,000 கியூபிக் மீட்டர் அளவுள்ள கதிரியக்கம் தோய்ந்த நீர் சுத்திகரிக்கப்படுவதற்காக சுமார் 1,200 கொள்கலனில் சேகரித்து வைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment