ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் நேற்று மும்பையில் ஆட்டோவில் பயணம் மேற்கொண்டார். இன்று அந்த ஆட்டோ டிரைவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் இருந்து மும்பைக்கு விமானத்தில் சென்ற கெஜ்ரிவால், விமான நிலையத்தில் இருந்து ஒரு ஆட்டோவில் ஏறி 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அந்தேரி ரெயில் நிலையத்துக்கு சென்றார். அவருடன் அதே ஆட்டோவில் ஆம்ஆத்மி நிர்வாகிகள் மேலும் 3 பேர் பயணம் செய்தனர்.
இவரது மும்பை பயணத்தில் ஏகப்பட்ட குழப்பங்கள் நடந்துள்ளது. இவரது ஆதரவாளர்கல் மெட்டல் டிடக்டர்களை உடைத்துள்ளனர். மேலும் கட்சி விசுவாசிகள் பலர் போக்குவரத்து விதிகளை மதிக்காமல் சென்றுள்ளனர்.
இந்த நிஅலையில் கெஜ்ரிவால் சென்ற ஆட்டோவில் மேலும் 3 பேர் பயணம் செய்துள்ளதால் ஆட்டோ டிரைவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஆட்டோவில் 3 பயணிகளுக்கு மேல் ஏற்றிச் சென்றதாக அவர் மீது போலீசார் வழக்கு தொடர்ந்துள்ளனர். மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மும்பை கூடுதல் போலீஸ் கமிஷனர் கியூசர் காலித் கூறினார்.
கெஜ்ரிவால் நடந்தே போனால் கூட ‘ஒன் வே’ என்று கேஸ் போட்டாலும் போடுவாங்க போல..


No comments:
Post a Comment