Latest News

கோட்சே ஆர்.எஸ்.எஸ்.காரர் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன: கபில்சிபல் !!


காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்தவர் என்பதற்கு போதிய ஆதாரங்கள் இருக்கின்றன” என்று மத்திய அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

ஆர்.எஸ்.எஸ். குறித்து பேசிய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி, குறித்து தேர்தல் விதிமுறையை ராகுல் மீறியுள்ளதாக பா.ஜ.க தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது.

பாஜகவின் இந்த புகார் மனு குறித்துப் பேசிய மத்திய அமைச்சர் கபில் சிபல், காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்தவர் என்பதற்கு போதிய ஆதாரங்கள் இருக்கின்றன. கோட்சே ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர் மட்டுமல்ல, அதன் உளவுப் பிரிவு தலைவர். இதனைப் பற்றி விவாதிப்பதற்கு ஆரம்பித்தால் உண்மை வெளிப்பட்டு விடும் என்ற அச்சத்திலேயே ராகுல் காந்தி மீது தேர்தல் ஆணைத்திடம் பாஜக புகார் அளித்திருக்கிறது என்றார்.

அரசியல் நேரங்களில் மட்டும் காங்கிரசு இந்த உண்மையே சொல்லுவது சரி இல்லை என்றும் ஆர் எஸ் எஸ் உடைய ஆபத்தான சித்தாந்தகளை மக்களுக்கு புரியவைக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வெரு சமூக ஆர்வலர்களுக்கு இருக்க வேண்டும் என்று  கூறுகிறார்கள்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.