பாராளுமன்ற தாக்குதலில் குற்றம் சாட்டப்பட்ட அப்ஸல் குருவை, சர்வதேச சட்டங்களை மீறி இந்தியா தூக்கிலிட்டது என்று சர்வதேச மனித உரிமை அமைப்பான ஆம்னஸ்டி இண்டர்நேசனல் தெரிவித்துள்ளது.
உலகில் நடக்கும் மரணத்தண்டனைகள் குறித்த வருடாந்திர ஆய்வறிக்கையில் ஆம்னஸ்டி கூறியிருப்பது:
அப்ஸல் குருவிற்கு தான் நிரபராதி என்பதை நிரூபிக்க, அவர் விரும்பிய ரீதியிலான சட்டப் பாதுகாப்போ, தகுதியுடைய வழக்கறிஞரையோ கிடைக்கவில்லை. சர்வதேச சட்டங்களை கடைப்பிடிப்பதில் இந்தியா தவறிழைத்துள்ளது.
அப்ஸல் குருவை தூக்கிலிடும் நேரத்தையோ இதர தகவல்களையோ அவரது குடும்பத்திற்கு அளிக்கப்படவில்லை. தூக்கிலிட்ட பிறகு அவருடைய உடலை குடும்பத்தினருக்கு அளிக்காததும் கடுமையான சட்ட மீறலாகும்.
அதேவேளையில் கடந்த ஆண்டு மரணத்தண்டனை விதிக்கப்பட்ட 18 பேரின் கருணை மனுக்களை நிராகரித்த குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, 25 ஆண்டுகளில் மிக அதிகமான கருணை மனுக்களை நிராகரித்த குடியரசு தலைவர் ஆவார்.
கடந்த ஆண்டு மட்டும் இந்தியாவில் 72 பேருக்கு மரணத்தண்டனை தீர்ப்பாக வழங்கப்பட்டுள்ளது. 400 பேர் மரணத் தண்டனையை காத்து இந்திய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு ஆம்னஸ்டியின் அறிக்கை கூறுகிறது.
ஒருவர் மீது குற்றம் நிருபிக்க படாமல் கூட்டு மனசாட்சி அடிப்படை யில் தூக்கு தண்டனை வழங்கியது இது தான் இந்தியாவில் முதன் முறை சிலரை திருப்பிதி படுத்தவே அப்சல் குரு தூக்கிலிட பட்டு இருக்கிறார் என்று சமூக ஆர்வலர் அருந்ததி ராய் மற்றும் பல சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து குறிப்பிட்டு வருகிறார்கள்
No comments:
Post a Comment