திமுகவினர் நடத்திய அதிரை நகர 16,17 வது வார்டுகளின் தஞ்சை பாராளுமன்ற தொகுதியின் தேர்தல் செயல்பாடு ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை 4.30 மணியளவில் மேலத்தெருவில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் தலைமை வகிக்க, திமுக மாவட்ட பிரதிநிதி மீராஷா, 16 வது வார்டு உறுப்பினர் முஹம்மது யூசுப் திமுக ஒன்றிய பிரதிநிதி அப்துல் ஹலீம், திமுக முன்னோடி யூசுப் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் அப்பகுதியினரின் கோரிக்கைகள் கேட்டறியப்பட்டன. அதை தொடர்ந்து எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தஞ்சை தொகுதி திமுக வேட்பாளர் டிஆர் பாலுவை வெற்றிபெற வைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனைக்கூட்டத்தில் பெரும்பாலானோர் பங்கேற்று கருத்துரைகளை வழங்கினார்கள்.
No comments:
Post a Comment