Latest News

ஆர்.எஸ்.எஸ் தலைவரின் தூண்டுதலிலே குண்டுவெடிப்புளை நடத்தினோம் அசிமானந்த் சுவாமிகள் வாக்குமூலம்


ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தற்போதைய தலைவரான மோகன் பகவத் உத்தரவைத் தொடர்ந்தே நாட்டில் பல குண்டுவெடிப்பு சம்பவங்களை நடத்தினோம் என்று சிறையில் இருக்கும் ஹிந்துத்துவ தீவிரவாதி சுவாமி அசீமானந்த் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 2006 ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரை பல இடங்களில் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. இதில் டெல்லியில் இருந்து பாகிஸ்தான் சென்ற சம்ஜெளதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பு, அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பு, ஹைதராபாத் மெக்கா மஸ்ஜித் தாக்குதல், மலேகான் குண்டுவெடிப்பு உள்ளிட்டவையும் அடங்கும். இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் முதன்மை குற்றவாளியாக ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் ஆதிவாசிகள் அமைப்பின் தலைவர் சுவாமி அசீமானந்த் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் பாரதிய ஜனதா கட்சியின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி.யின் தேசிய செயற்குழு உறுப்பினரான பிரக்யா சிங் தாகுர், மத்திய பிரதேசத்தின் இந்தூர் மாவட ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தின் முன்னாள் தலைவர் சுனில் ஜோஷி உளிட்ட 31 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதில் சுவாமி அசீமானந்தை caravanmagazine.in என்ற இணைய தள ஊடக நிர்வாகத்தினர் 201 1ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 4 முறை பல்வேறு சூழல்களில் அம்பாலா சிறையில் சந்தித்து பேசினர். அப்போது அசீமானந்தா தெரிவித்த தகவல்களை இந்த இணையதளம் வெளியிட்டுள்ளது. அதில் அசீமானந்த் கூறியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதன் சுருக்கம்:

மகாத்மா காந்தி படுகொலையைத் தொடர்ந்து நாதுராம் கேட்சோ, நாராயண் அப்தே ஆகியோர் 1949ஆம் ஆண்டு தூக்கிலிடப்பட்டு புதைக்கப்பட்ட சிறைதான் இந்த அம்பாலா சிறை. இந்த வழக்கில் கூட்டுச் சதியாளராக சேர்க்கப்பட்டு 18 ஆண்டுகாலம் சிறைவாசம் அனுபவித்தவர் கோட்சேயின் சகோதரர் கோபால் கோட்சே. அவர் அடைக்கப்பட்டிருந்த அதே செல்லில்தான் இப்போது நான் இருக்கிறேன். அது எனக்கு பெருமையாக இருக்கிறது. ஹிந்துக்களின் நன்மை கருதியே குண்டுவெடிப்புகளை நிகழ்த்தினோம். இதற்காக நான் பெருமைப்படுகிறேன். என்னை யாரும் துன்புறுத்தியது இல்லை. அனைத்து விசாரணை அதிகாரிகளிடமும் நான் ஒப்புதல் வாக்குமூலம்தான் கொடுத்திருக்கிறேன்.

2005ஆம் ஆண்டு ஜூலை மாதம் அதாவது குஜராத்தின் சூரத்தில் ஆர்.எஸ்.எஸ். மாநாடு முடிவடைந்த பின்னர் அப்போது ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பொதுச்செயலராக இருந்த தற்போதைய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தின் தற்போதைய தேசிய செயற்குழு உறுப்பினர் இந்தரேஷ் குமார் ஆகியோர் குஜராத்தின் டாங்க்ஸ் பகுதியில் என்னை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது சுனில் ஜோஷியும் உடனிருந்தார். இந்தியா முழுவதும் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தும் திட்டம் பற்றி விவாதிக்கப்பட்டது. அப்போது மோகன் பகவத் என்னிடம், நீங்கள் சுனில் ஜோஷியுடன் இணைந்து இதை செய்யுங்கள். நாங்கள் நேரடியாக தலையிட முடியாது. இப்படி குண்டு வெடிப்புகளை நிகழ்த்துவது ஒன்றும் குற்றமும் அல்ல. இது நமது தத்துவ சிந்தனையுடன் தொடர்புடையது. ஹிந்துக்களுக்கு முகவும் முக்கியமானது. தயவு செய்து இதை நீங்கள் செய்யுங்கள். உங்களுக்கு எங்களது ஆதரவு எப்போதும் உண்டு என்று தெரிவித்தார்.

இவ்வாறு சுவாமி அசீமானந்த் கூறியுள்ளார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத்தே குண்டுவெடிப்புகளுக்கு உத்தரவிட்டார் என சுவாமி அசீமானந்த் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.