லோக்சபா தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் பிரதமர் வேட்பாளராக அரவிந்த் கேஜ்ரிவால் அறிவிக்கப்பட இருக்கிறார்.
டெல்லி சட்டசபையில் ஜன்லோக்பால் மசோதாவை தாக்கல் செய்ய முடியாததால் முதல்வர் பதவியை அரவிந்த் கேஜ்ரிவால் ராஜினாமா செய்தார். ஆட்சியில் இருந்த கடந்த ஆட்சி அமைக்க ஆதரவு அளித்த காங்கிரசும் பாரதிய ஜனதாவும் கேஜ்ரிவாலை நிம்மதியாக இருக்கவிடவில்லை.
டெல்லி முதல்வராக இருந்த போது காமன்வெல்த் ஊழல், மின் விநியோக ஊழல், இயற்கை எரிவாயு விலை நிர்ணய ஊழல் என ஏகப்பட ஊழல்களை மீது வழக்குதொடர உத்தரவிட்டார். இதனால் பாரதிய ஜனதாவும் காங்கிரஸும் கேஜ்ரிவாலுக்கு எதிராக கரம் கோர்த்தன.
தற்போது அவர் ஜன்லோக்பால் மசோதாவை தாக்கல் செய்ய முடியாமல் ராஜினாமா செய்துவிட்டார். இது தமக்கு மக்கள் மத்தியில் அனுதாபம் தேடித்தரும் என நினைக்கிறார் கேஜ்ரிவால்.
இந்த அனுதாபத்தை லோக்சபா தேர்தலில் காங்கிரஸ், பாரதிய ஜனதாவுக்கு எதிராக பயன்படுத்தவும் அவர் திட்டமிட்டுள்ளார். இதனால் லோக்சபா தேர்தலிலும் கேஜ்ரிவால் போட்டியிடக் கூடும் எனத் தெரிகிறது.
ஏற்கெனவே 300க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடப் போவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. இந்நிலையில் அரவிந்த் கேஜ்ரிவாலை ஓரிரு நாட்களில் பிரதமர் வேட்பாளராகவும் ஆம் ஆத்மி கட்சி அறிவிக்கக் கூடும் எனத் தெரிகிறது.
No comments:
Post a Comment