உலகின் நீளமான சுரங்கத்தை கடலுக்கடியில் உருவாக்க சீனா திட்டமிட்டுள்ளது. சுமார் 36 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் இரண்டு துறைமுக நகரங்களுக்கு இடையில் இந்த சுரங்கப்பாதை உருவாக்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் ஷேன்டாங் மாகாணத்தில் உள்ள யான்டாய்யில் இருந்து லீபோனிங் மாகாணத்தில் உள்ள டைலான் நகரத்தை இணைக்கும் வகையில் சுமார் 123 கிலோமீட்டர் நீள சுரங்கப்பாதை அமைக்கபடுகிறது. தற்போது இந்த இரண்டு நகரங்களுக்கு இடையிலான 1,400 கி.மீ. தொலைவை கடந்து செல்ல 8 மணி நேரம் பயணம் செய்ய வேண்டியுள்ளது.
ஆனால், இந்த சுரங்கம் கட்டி முடிக்கப்பட்டால் யான்டாய் கடற்பகுதியிலிருந்து போகாய் கடற்பகுதிக்கு 40 நிமிடங்களில் சென்று விடலாம்.
இந்த திட்டம் சீனாவின் 13வது ஐந்தாண்டு திட்டத்திற்குள் (2016-2020) முடிக்கப்படும் என எதிர்பார்ப்பதாக சீனாவிலுள்ள கட்டுமான நிறுவனத்தில் சுரங்கம் மற்றும் ரயில்வே நிபுணராக உள்ள வாங் மெங்சூ கூறியுள்ளார்.
இந்த பிரம்மாண்ட திட்டத்திற்கான மாதிரி வரைபடம் வரும் ஏப்ரல் மாதம் மாநில கவுன்சிலில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே அதிவேக ரயில்களின் போக்குவரத்து கட்டமைப்பில் சீனா வேகமாக வளர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment