Latest News

  

அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!



எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகம், புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா இன்று வெளியிட்டார்.

தனது பிறந்தநாளையொட்டி பத்திரிகையாளர்களை சந்தித்த ஜெயலலிதா, 40 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தார்.

அதேவேளையில், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கூட்டணி கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு முடிவடைந்த பிறகு, கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளில் அறிவிக்கப்பட்டுள்ள அதிமுக வேட்பாளர்கள் திரும்பப் பெறப்படுவார்கள் என்றார்.

வேட்பாளர்கள் பட்டியல்:

1.திருவள்ளூர் (தனி)- பி.வேணுகோபால்

2.வேலூர் – செங்குட்டுவன்

3.சேலம்- வி.பன்னீர்செல்வம்

4.தென் சென்னை- ஜெயவர்த்தன்

5.மத்திய சென்னை- விஜகுமார்

6.தூத்துக்குடி- ஜெயசிங் தேவராஜ் நட்டர்ஜி

7.தென்காசி (தனி)- வி.சாந்தி முருகேசன்

8.திருநெல்வேலி- பிரபாகரன்

9.கன்னியாகுமரி- ஜான் தங்கம்

10.விழுப்புரம் (தனி)- ராஜேந்திரன்

11.சிதம்பரம் (தனி)- சந்திரகாசி

12.மயிலாடுதுறை- பாரதி மோகன்

13.நாகப்பட்டினம் (தனி)- கோபால்

14.காஞ்சிபுரம்(தனி)- மரகதம் குமரவேல்

15.மதுரை- கோபாலகிருஷ்ணன்

16.தேனி- பார்த்திபன்

17.விருதுநகர்- ராதாகிருஷ்ணன்

18.ராமநாதபுரம்- அன்வர்ராஜா

19.அரக்கோணம்- கோ.அரி

20.கிருஷ்ணகிரி- அசோக்குமார்

21.வடசென்னை- டி.ஜி.வெங்கடேஷ்

22.ஸ்ரீபெரும்புதூர்- ராமச்சந்திரன்

23.தர்மபுரி- மோகன்

24.திருவண்ணாமலை- வனரோஜா

25.ஆரணி- ஏழுமலை

26.கள்ளக்குறிச்சி- காமராஜ்

27.நாமக்கல்- சுந்தரம்

28.ஈரோடு- செல்வகுமார் சின்னையன்

29.திருப்பூர்- சத்யபாமா

30.கோவை- நாகராஜன்

31.நீலகிரி (தனி) – கோபாலகிருஷ்ணன்

32.பொள்ளாச்சி- மகேந்திரன்

33.திண்டுக்கல்- உதயகுமார்

34.கரூர்- தம்பிதுரை

35.திருச்சி- ப.குமார்

36.பெரம்பலூர்- மருதை ராஜன்

37.கடலூர்- அருண்மொழி தேவன்

38.தஞ்சை- பரசுராமன்

39.சிவகங்கை- செந்தில்நாதன்

40.புதுச்சேரி- எம்.வி.ஓமலிங்கம்

அதிமுகவின் முதன்மை இலக்கு:

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அதிமுக சார்பில் பிரதமர் பதவிக்கு நான் முன்னிறுத்தப்பட்டாலும், 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதே அதிமுகவின் முதன்மையான இலக்கு.

தமிழகத்தில் அமைதியை நிலைநாட்ட அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும். அதிமுக தேர்தல் அறிக்கை தயாராகிக் கொண்டிருக்கிறது. அந்த அறிக்கை வெளியிடப்படும்போது கட்சியின் தேர்தல் பிரச்சார மையக்கருத்து என்ன என்பது தெரிவிக்கப்படும்.

ஆனால் எப்போதுமே, அதிமுக அரசு தமிழகத்தில் அமைதி நிலைத்திட வேண்டும், வளர்ச்சி மேலோங்க வேண்டும் என்ற கொள்கையுடன் செயல்பட்டு வருகிறது.

ராஜீவ் கொலை வழக்கு குறித்த கேள்விக்கு, “மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மறுஆய்வு மனுவை சட்ட ரீதியாக அணுகுவோம். உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்கு குறித்து மேலும் விமர்சிக்க முடியாது” என்றார் ஜெயலலிதா.

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தனது முதல்கட்ட பிரச்சாரப் பயணத் திட்டத்தையும் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார். அதன்படி, மார்ச் 3 முதல் ஏப்ரல் வரை அவர் தமிழகம் முழுவதும் முதல்கட்ட பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.