அமீரகம் துபாயில் ஆங்கில வருடம் 2014 ன் முதல் நாளான நேற்று இரவு உலக கின்னஸ் சாதனை படைக்கவேண்டி உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபா டவர் மற்றும் பால்ம் ஜுமேரா ஆகிய இடங்களில் வான வேடிக்கை நிகழ்ச்சி நடத்தப்பட்டன. கடந்த ஆண்டு குவைத் நாட்டின் 50வது தேசிய நாள் கொண்டாடப்பட்ட போது 60 நிமிடங்கள் வானவேடிக்கை நடத்தப்பட்டது. அதற்கு சுமார் 77,000 வெடிகள் பயன்படுத்தப்பட்டது.
இதனை மிஞ்சும் அளவுக்கு, ஆறு நிமிடங்களில் 400 இடங்களிலில் இருந்து 450,000 வெடிகளை வெடித்தனர். இதற்கு முன் பார்த்திராத அளவுக்கு வானவேடிக்கையை நிகழ்த்தப்பட்டது. மணல் பாறைகளை கொண்டு உறுவாக்கப்பட்ட பாம் ஜுமேரா தீவிலும் இந்த வானவேடிக்கை நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியைக் காண ஏராளமான அமீரக வாழ் பொதுமக்கள் திரண்டனர்.
அதன் புகைப்படங்கள் இதோ...
No comments:
Post a Comment