Latest News

நின்ற லாரி மீது வேன் மோதி 5 பேர் பரிதாப சாவு!


உறவினர் திருமணத்துக்காக சென்னையில் இருந்து வந்தவர்களது வேன், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த மணல் லாரி மீது மோதிய விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். குழந்தைகள் உள்பட 9 பேர் படுகாயமடைந்தனர்.சென்னை, வெட்டுவாங்கேணியை சேர்ந்தவர் ஜமால் மைதீன். மதுரை, சக்கிமங்கலத்தில் நடைபெறும் உறவினர் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக மினி வேனில் குடும்பத்தினர் 14 பேருடன் புறப்பட்டார். வேனை சையத் சுலைமான் ஓட்டினார். நேற்று அதிகாலை 3 மணியளவில் மதுரை மாவட்டம், தும்பைப்பட்டி அருகே மணப்பட்டி பகுதியில் வேன் வந்துகொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராதவிதமாக, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த மணல் லாரி மீது மினி வேன் பயங்கரமாக மோதியது.


இந்த விபத்தில் ஜமால் மைதீன் (60), லைலா (53), வேனை ஓட்டிய சையத் சுலைமான் (35) மூவரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர். படுகாயமடைந்தவர்களை அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் மீட்டு மேலு£ர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர். வழியிலேயே அப்துல் ரஜாக் (27) உயிரிழந்தார். படுகாயமடைந்த அஜய் பாத்திமா (35), முகமது தாபிக் (3), ஆயிஷா (21), அசன்பாத்திமா (50), தௌபிக் (6), அப்துல்ரஹீம் (4), காமிலா பேகம் (25), சம்சுதீன் (28), பேகம் (28), உம்ம சலீமா (35) ஆகிய 10 பேர் மேலு£ர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவிக்குப் பின் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி அசன் பாத்திமா உயிரிழந்தார்.

விபத்து குறித்து தகவலறிந்த கொட்டாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனியப்பன் சம்பவ இடத்திற்கு சென்று பலியானோரின் உடல்களை கைப்பற்றி மேலு£ர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். விபத்துக்குக் காரணமான லாரியின் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.