டெல்லி சட்டசபை தேர்தலில் பிரதான கட்சிகளை கலங்கடித்த ஆம் ஆத்மி கட்சி லோக்சபா தேர்தலுக்கும் தயாராகி வருகிறது. டெல்லியில் இது தொடர்பாக அக்கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் இன்று கூடி விவாதித்தது. டெல்லி சட்டசபை தேர்தல் வெற்றியை தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி லோக்சபா தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக இன்று தேசிய செயற்குழுக் கூட்டத்தைக் கூட்டியது.
23 பேர் கொண்ட அக்கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் லோக்சபா தேர்தலுக்கான வியூகங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் அடுத்த 10 முதல் 15 நாட்களில் ஆம் ஆத்மி கட்சியின் முதலாவது வேட்பாளர் பட்டியலை வெளியிடவும் தீர்மானிக்கப்பட்டது. முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் யோகேந்திர யாதவ், ராகுல் காந்தியும் நரேந்திர மோடியும் பிரதமர் பதவிக்காக போட்டியிடுவது துரதிருஷ்டவசமானது. அவர்கள் இருவரைவிட நாடு மிகச் சிறந்த ஒருநபரை எதிர்பார்க்கிறது. எங்களுடைய கனவு கேஜ்ரிவால்தான் நாட்டின் பிரதமராக வேண்டும் என்பது. அவருக்குத்தான் அந்த தகுதி இருக்கிறது என்றார்.
லோக்சபா தேர்தலிலும் கேஜ்ரிவாலையே பிரதமர் வேட்பாளராக ஆம் ஆத்மி அறிவிக்கலாம் என்பதையே யோகேந்திர யாதவின் பேட்டி சுட்டிக்காட்டுகிறது.
No comments:
Post a Comment