"மருத்துவமனை" இந்த வார்த்தையை கேட்டால், நோய்களுக்காக பயப்படுவதா!! இல்லை செலவுகளுக்காக பயப்படுவதா!! என்ற குழப்ப நிலையில் உள்ளது இன்றைய வாழ்க்கை முறை. இத்தகைய சூழ்நிலையில் மருத்துவ காப்பீடு (health insurance) நமக்கு மிகவும் உதவியாக இருக்கும். மக்களிடம் இதை பற்றி சரியான விழிப்புணர்வு இல்லாத காரணத்தினால், அவர்கள் கூறும் பதில்கள் "நான் நன்றாக தான் இருக்கிறேன், எனக்கு இது எல்லாம் தேவை இல்ல பாஸ்" அல்லது "நான் மருத்துவ காப்பீடு வைத்துள்ளேன், ஆனால் இதனுடைய பலன்களை இன்றுவரை நான் அனுபவித்ததில்லை" என்று தான் மக்கள் கூறுவார்கள். ஆனால் இதே கேள்வியை காப்பீடு இல்லாமல் மருத்துவ செலவுகளில் சிக்கித் தவித்தவர்களிடம் கேட்டால். அவர்களின் பதில் முற்றிலும் மாறுப்பட்டவையாக இருக்கும்.
இன்றைய மருத்துவ செலவுகள் இமாலைய அளவு உயர்ந்துள்ளது. எனவே மருத்துவ செலவுகள் நமது சேமிப்புகள் அனைத்தையும் தின்றுவிடும், இதுமட்டும் அல்லாமல் மன வேதனை அதிக அளவில் கொடுக்கும் நிலை ஏற்படும். இக்காப்பீடு இல்லையெனில் பண பிரச்சனையுடன், சேர்த்து குடும்பத்தின் அமைதி நிலை கடுமையாக பாதிக்கும். இக்காப்பீட்டை கொண்டு எந்த ஒரு மருத்துவ செலவுகளையும் சரிசெய்ய முடியும். இதனால் பணத்தை பற்றி கவலைப்படாமல், செலவுகளை எப்படி மீட்டெடுப்பது என்பதை பற்றி யோசிக்கலாம். உங்கள் மருத்துவ செலவுகளை, நீங்கள் காப்பீடு பெற்ற நிறுவனம் பார்த்துக்கொள்ளும். இதனால் உங்கள் குடும்பத்திற்கு மிக சிறந்த மருத்துவ சேவைகளை அளிக்க முடியும். மருத்துவ காப்பீடு பெறுவதன் முலம் உங்கள் சேமிப்பை இலக்கவும், கடன் பெறவும் தேவையில்லை.
உதாரணமாக : ரூ 10,600 கொண்டு உங்கள் குடும்பத்திற்கு 2,00,00 வரை மருத்துவ காப்பீடு வழங்க முடிந்தால்!!. இதைப்பற்றி யோசிக்க வைக்கிறது. எனவே மருத்துவ காப்பீடு பெற இதுவே சிறந்த தருணமாகும். உங்கள் குடும்பம் மிகவும் ஆரோக்கியமாக இருந்தாலும் சரி, விபத்து போன்ற எதிர்பாராத மருத்துவ செலவுகளை ஈடுக்கட்ட இந்த மருத்துவ காப்பீடு உதவும். உங்கள் சேமிப்பில் சிறு தொகையை கொண்டு உங்கள் வாழ்வையும், குடும்பத்தையும் அமைதியான முறையில் வழிநடத்த முடியும்.
தற்போது ஒரே காப்பீட்டுத் திட்டத்தில், உங்களுக்கும், உங்கள் அன்பு குடும்பத்துக்கும் சேர்த்து காப்பீடு பெற முடியும். மேலும் மருத்துவ காப்பீட்டிற்கு வருமான வரிச் சட்டம் 80Dயின் கீழ் வரிச் சலுகை அளிக்கப்படுகிறது. முடிவுரை: எனவே மருத்துவ காப்பீடு என்பது முதலீடு அல்ல - நம் அழகான வாழ்க்கையை பாதுகாக்கும் ஒர் கவசம். இத்தகைய மருத்துவ காப்பீடு நிதி சுமையை தவிர்ப்பது மட்டும் அல்லாமல், நம்மையும், நம்மை சார்ந்து உள்ளோரையும் பாதுகாக்கும். 26 வயதாகும் உங்களுக்கும், 24 வயதாகும் உங்கள் மனைவி மற்றும் குழந்தைக்கும் சேர்த்து ரூ 10,600 வருடாந்திர பிரீமியம் கொண்டு 2 இலட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். மருத்துவ காப்பீட்டை உடனடியாக பெற, இதை கிளிக் செய்யவும்.
No comments:
Post a Comment