முசாபர் நகர்: முசாபர் நகர் கலவரம் தொடர்பாக, கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ள, பாரதிய ஜனதா, எம்.எல்.ஏ., சங்கீத் சோம், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நேற்று மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தர பிரதேச மாநிலம், முசாபர் நகரில் சில தினங்களுக்கு முன், இரு பிரிவினரிடையே நடந்த மோதலில், 49 பேர் பலியாயினர்.
இந்த கலவரத்திற்கு முக்கிய காரணமாக இருந்ததாக, பா.ஜ., எம்.எல்.ஏ., சங்கீத் சோம் போலீசாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே, கலவரத்திற்கு முக்கிய காரணமாக இருந்த, போலி வீடியோ காட்சிகளை பரப்பியதாகவும், வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாகவும், சங்கீத் சோம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து, நேற்று தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார். சங்கீத் சோம் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஏராளமான பா.ஜ., தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
நன்றி : www.igckuwait.net
No comments:
Post a Comment