மும்பை: சிரியாவின் மீது 2 ஏவுகணைகள் வந்து விழுந்ததாக ரஷ்யா தெரிவித்ததையடுத்து, இந்திய பங்குச் சந்தைகள் இன்று வர்த்தக நேர முடிவின்போது, கடைசி நேரத்தில் ஆட்டம் கண்டன. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 68.80 ஆக சரிந்தது. இது தான் இதுவரை ஏற்பட்டதிலேயே மிகப் பெரிய சரிவாகும். பின்னர் கொஞ்சம் தேறி 67.96 என்ற நிலையை அடைந்தது. அதே போல மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 680 புள்ளிகள் சரிந்தது.
அங்கு ஏவுகணைகள் வந்து விழுந்தனவா என்பதே சந்தேகமாக உள்ளது. இதை சிரியாவே இன்னும் உறுதிப்படுத்தவில்லை. ஆனால் பங்குச் சந்தை யூக வியாபாரிகள் தாங்களே எல்லாவற்றையும் முடிவு கட்டிக் கொண்டு சந்தையையும் ரூபாய் மதிப்பையும் மேலும் பதம் பார்த்துவிட்டனர்.
No comments:
Post a Comment