பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
அமீரகம் தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்கத்தினரின் சார்பாக கடந்த வருடங்களை போல், இந்த வருடமும் அமீரகத்தில் வாழ்கிற அதிரை மேலத்தெரு முஹல்லா சகோதரர்களிடம் ஃபித்ரு ஜகாத் என்னும் நோன்பு பொருநாள் தர்மத்தை வசூல் செய்து அதன் நிர்வாகிகளால், அதிரையில் இயங்கி வருகிற TIYA நிர்வாகத்திற்கு ரூ 80,000/- அனுப்பி வைக்கப்பட்டது. அதே போன்று இந்த வருடம் முதன்முதலாக குவைத் வாழ் மேலத்தெரு மஹல்லாவாசிகளிடம் சகோதரர் பாவா பகுருதீன் அவர்கள் மூலம் திறட்டப்பட்ட ரூ 6,000/- ம், இந்த இரு தொகைகளுடன் அதிரை TIYA சார்பாக கூடுதலாக ரூபாய் 8,500/- சேர்க்கப்பட்டு மொத்தம் ரூபாய் 94,500/- மதிப்பிலான பொருட்கள் மேலத்தெருவில் வாழ்கிற தேவையுடைய ஏழை-எளிய மக்களுக்கு பெருநாள் தர்மம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!
அதிரை TIYA சார்பாக வழங்கப்பட்ட பெருநாள் தர்மத்தின் மூலம் 135 குடும்பங்கள் பயனடைந்துள்ளனர். அவர்களில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் முறையே – 10 கிலோ அரிசி, மளிகை பொருட்களான – (சேமியா 200கிராம், சீனி 500கிராம், முந்திரி-திராட்சை 50கிராம், ஆயில் 1லிட்டர், கடப்பாசி 10கிராம், பருப்பு 100கிராம், மசாலா தூள் 50கிராம், இஞ்சி 50கிராம்) இவைகளுடன் ரொக்கமாக ரூபாய் 100/- ஒவ்வொரு குடும்பங்களுக்கு நிறைவாக அதிரை TIYA நிர்வாகிகளால், அவரவர் வீடுகளுக்கு நேரடியாக சென்று வழங்கப்பட்டது.
அரிசி 10கிலோ (1 கிலோ = ரூ 40/-)
135 குடும்பங்களுக்கு X ரூ 400/-
|
54,000.00
|
மளிகை பொருட்களின் மதிப்பு 1 குடுமபத்திற்கு ரூ 200/- X 135
|
27,000.00
|
ரொக்கமாக 1 குடும்பத்திற்கு வழங்கியது ரூ100/- X 135
|
13,500.00
|
மொத்தம்
|
94,500.00
|
இந்த புனிதமான காரியம் இனிய முறையில் ஏழைகளுக்கு வழங்க முயற்சிகள் செய்த அனைத்து சகோதரர்களுக்கு அதிரை தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்கம் சார்பாக பரிபூரணமான நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். எல்லாம் வல்ல அல்லாஹ் நமது அனைத்து வணக்கங்களையும், வழிபாடுகளையும் ஏற்று, நமது இம்மை மறுமை வாழ்வில் ஈடேற்றமளிப்பானாக! ஆமீன்.
தகவல்:
நிர்வாகம்
அதிரை TIYA
No comments:
Post a Comment