அதிரை அருகில் உள்ள கருங்குளம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் சத்தியபாமா [வயது 45 ] அவரின் மகள்வழி பேத்திகள் ஈஸ்வரி [ வயது 7 ] , அட்சயா [ வயது 3 ]. இன்று மாலை 4 மணியளவில் தனது வீட்டின் எதிரில் உள்ள சாலையோரத்தில் அமைந்துள்ள முருங்கை மரத்தில் கீரை பறித்துக்கொண்டு இருந்தவர் மீது நாகப்பட்டினத்திலிருந்து கணவாய், இறால் ஏற்றிக்கொண்டு தூத்துக்குடி சென்ற வேன் மோதியதில் சத்தியபாமா மற்றும் அட்சயா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். பலத்த காயமடைந்த ஈஸ்வரி சிகிச்சைக்காக தஞ்சை அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
தகவலறிந்த அதிரை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்த உடல்களை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் இந்தப்பகுதி முழுவதும் பரப்பரப்புடன் காணப்பட்டது.
நன்றி : அதிரைநியூஸ்
No comments:
Post a Comment