புதுடெல்லி: பொய் வழக்குகள் மூலம் சிறையில் வாடும் முஸ்லிம்களுக்கு சட்ட உதவி வழங்க மத்திய அரசு முடுவெடுத்துள்ளது.
தீவிரவாத வழக்குகளில் பெரும்பாலும் முஸ்லிம்களே சிக்கவைக்கப் பட்டுள்ளனர். இதில் அநியாயமாக சிக்கவைக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு சட்ட உதவி வழங்கவுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. அதன்படி தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) பதிவு செய்த தீவிரவாத வழக்குகளை விசாரிக்க நாடு முழுவதும் 39 சிறப்பு நீதிமன்றங்களை நிறுவி அதன்மூலம் சட்ட உதவி வழங்கவும் மத்திய அரசு தயாராகி வருகிறது.
சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம்(யு.ஏ.பி.ஏ) முஸ்லிம்களுக்கு எதிராக வேண்டுமென்றே பிரயோகிக்கப்படுவதாகவும், தீவிரவாத வழக்குகளில் தீர்ப்பளிக்க சிறப்பு நீதிமன்றங்கள் நிறுவ வேண்டும் என்றும் மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ரஹ்மான் கான் மத்திய உள்துறை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டேவுக்கு ஏற்கனவே புகார் கடிதம் எழுதியிருந்தார். இதனை ஷிண்டே அங்கீகரித்திருந்தார். இதனைத் தொடர்ந்து என்.ஐ.ஏ பதிவு செய்த தீவிரவாத வழக்குகளை விசாரிக்க நாடு முழுவதும் 39 சிறப்பு நீதிமன்றங்களை நிறுவ அரசு முடிவெடுத்துள்ளது.
No comments:
Post a Comment