இக்கல்வியாண்டில் முதுகலை டிப்ளமோ படிப்பில் வணிக மேலாண்மை, மனிதவள மேலாண்மை, பொது மேலாண்மை உள்ளிட்ட படிப்புகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
அங்கீகாரம் பெற்ற பல்கலையில் மூன்று வருட இளநிலை பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்படிப்புக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலாண்மை பணியில் ஐந்து வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
நேர்முகத்தேர்வு, குழுகலந்துரையாடல், XAT நுழைவுத்தேர்வில் பெறும் மதிப்பெண், பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
ஆன்லைனில் பதிவு செய்ய டிசம்பர் 21 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்கள் அறிய எக்ஸ்.எல்.ஆர்.ஐ கல்வி நிறுவன இணையதளத்தை பார்க்கலாம்.
No comments:
Post a Comment