சிரியாவில் அதிபர் ஆதரவு படைகள் ரசாயன ஆயுத தாக்குதல் நடத்தின. இந்த கொடூர தாக்குதலில் 1300 பேர் கொன்று குவிக்கப்பட்டனர்.
தூங்கிக்கொண்டிருந்த பெண்களும், குழந்தைகளும் உயிரிழந்த துயரம் நேரிட்டுள்ளது. ஆனால் ரசாயன ஆயுத தாக்குதலை அதிபர் பஷார் அல் ஆசாத் தரப்பு மறுத்து உள்ளது என்று அரசு டெலிவிஷன் அறிவித்தது.
ஏற்கனவே அதிபர் பஷார் அல் ஆசாத் ஆதரவு படையினர் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தி வருவதை தாங்கள் நம்புவதாக அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.
சிரியாவில் ஏற்கனவே ரசாயன ஆயுத தாக்குதல் நடைபெறுவதாக வெளியான தகவலை அடுத்து அங்கு ஐ.நா. ரசாயன ஆயுத வல்லுனர்கள் நேரில் சென்று விசாரணை நடத்த உள்ள நிலையில், நடந்துள்ள இந்த தாக்குதல் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளன.
இந்த பிரச்சினையில் உடனடியாக ஐ.நா. தலையிடவேண்டும், பாதுகாப்பு கவுன்சிலை கூட்டி விவாதிக்க வேண்டும் என்று சிரியா தேசிய கூட்டணி கேட்டுக்கொண்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது.
சிரியாவில் கடந்த 2011ல் இருந்து அதிபர் பஷார் அல் அசாத்துக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகின்றன.
No comments:
Post a Comment