அதிரை நகருக்கு குடிநீர் சப்ளை அருகில் உள்ள விலாரிக்காடு பகுதியில் அமைந்துள்ள அதிக திறன் கொண்ட நீர் மூழ்கி மோட்டார் பம்ப் மூலம் தண்ணீர் எடுத்து அதிரையில் இருக்கிற நீர் தேக்கத் தொட்டிகளில் சேமித்து வைத்து வீடுகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அதிக மின்சார சப்ளைக் காரணமாக நீர் மூழ்கி மோட்டார் பம்ப்கள் பழுதடைந்து விட்டன. இதனால் அதிரையின் முக்கியப் பகுதிகளுக்கு குடிநீர் விநியோகிப்பதில் தடங்கள் ஏற்பட்டுள்ளதோடு மட்டுமல்லாமல் அதிரை மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.
இதுகுறித்து பேரூராட்சி தொடர்புடைய அலுவலரிடம் விசாரித்த வகையில்... 'துரிதமாக வேலைகள் நடந்து வருவதாகவும், விரைவில் பழுதுகள் சரி செய்யப்பட்டு சீராக குடிநீர் வழங்க முயற்சி மேற்கொள்ளப்படும்' எனத் தெரிவித்தார்.
நன்றி : அதிரைநியூஸ்
No comments:
Post a Comment