குளச்சல்: காதலியை தீ வைத்து கொளுத்திய காதலனை போலீசார் கைது செய்தனர். இதனால் வெள்ளிச் சந்தையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.குமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே அழிக்கால் பிள்ளைதோப்பு பகுதியை சேர்ந்தவர் பீட்டர். கேரளாவில் மீன்பிடி தொழில் செய்கிறார். இவரது மகள் சுபானி (16). ஓராண்டுக்கு முன்பு முட்டத்தில் உள்ள பள்ளியில் படித்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த எவரெஸ்ட் (23) என்ற வாலிபருடன் காதல் ஏற்பட்டது. இந்த காதல் விவகாரம் தெரிய வந்ததும், சுபானியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பள்ளிக்கு அனுப்பாமல், சுபானியை வீட்டிலேயே தங்க வைத்தனர். அதன்பின், எவரெஸ்ட்டுடன் தொடர்பு இல்லாமல் போனது.
இந்நிலையில், அழிக் கால் பிள்ளைதோப்பு பகுதிக்கு எவரெஸ்ட் வந்தார். யாருக்கும் தெரியாமல் சுபானியின் வீட்டு பாத்ரூமுக்குள் சென்று பதுங்கி கொண் டார். வீட்டில் இருந்தவர்கள் வெளியே செல்வதை பார்த்த எவரெஸ்ட், சுபானியின் கையை பிடித்து இழுத்தார். அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சல் போட்டார். இதில் ஆத்திரம் அடைந்த எவரெஸ்ட் மறைத்து வைத்து இருந்த டீசலை சுபானி மீது ஊற்றி தீ வைத்தார். இதில் அவரது உடல் முழுவதும் கருகியது.
அதை பார்த்ததும் எவரெஸ்ட் அங்கிருந்து தப்பியோடினார். உயிருக்கு போராடிய சுபானியை அக்கம் பக்கத்தினர் மீட்டு நாகர்கோவில் மருத்துவமனையில் சேர்த்தனர். சுபானிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து வெள்ளிச்சந்தை போலீசார் வழக்கு பதிவு செய்து எவரெஸ்ட்டை இன்று காலை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது. இதனால் வெள்ளிச் சந்தை பகுதியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
No comments:
Post a Comment