துபாய்: துபாய் ஈமான் அமைப்பின் செயற்குழு உறுப்பினர் வி.களத்தூர் ஷாகுல் ஹமீது நேற்று(27.04.2013) அதிகாலை திண்டுக்கல்லில் நடந்த சாலை விபத்தில் மரணம் அடைந்தார்.
கடந்த 2011ம் ஆண்டு காயிதே மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளர் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி. தலைமையில் திருமணம் செய்து கொண்டவர் வி.களத்தூர் ஷாகுல் ஹமீது. இவருக்கு மனைவி, ஒரு குழந்தை, தாய், சகோதரி ஆகியோர் இருக்கின்றனர். ஈமான் மற்றும் அமீரக காயிதே மில்லத் பேரவையின் பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர்.
தேரா பகுதியில் எந்தப் பணியானாலும் அதனை நிறைவேற்றுவதில் முன்னிலை வகித்தவர். இவரது இழப்பு ஈமான் அமைப்புக்கும், அமீரக காயிதே மில்லத் பேரவைக்கும் பேரிழப்பு என ஈமான் அமைப்பின் பொதுச் செயலாளர் குத்தாலம் அல்ஹாஜ் ஏ. லியாக்கத் அலி, அமீரக காயிதே மில்லத் பேரவையின் பொதுச் செயலாளர் திருப்பனந்தாள் ஏ. முஹம்மது தாஹா ஆகியோர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளனர்.
காயிதே மில்லத் பேரவை சர்வதேச ஒருங்கிணைப்பாளர் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி., இனிய திசைகள் ஆசிரியர் முனைவர் பேராசிரியர் சேமுமு முஹம்மதலி ஆகியோரும் சாகுல் ஹமீது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். திண்டுக்கல் விபத்து: விடுமுறைக்காக தாயகம் சென்றிருந்த ஷாகுல் ஹமீது நேற்று முன்தினம் நள்ளிரவு குடும்பத்தினருடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றார்.
திண்டுக்கல்லில் சாலையோர கடையில் டீ குடிப்பதற்காக இறங்கியவர். பின்னால் நின்று கொண்டிருந்த லாரி மீது குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்த மற்றொரு லாரி மோதியதில் ஷாகுல் ஹமீது மீது அது மோதி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
தமிழகத்தில் மதுவினால் ஏற்பட்டு வரும் பாதிப்புகள், இழப்புகள் ஆட்சியாளர்களுக்கு தெரியாததல்ல. அரசு வருமானத்திற்காக தொடர்ந்து மதுக்கடைகளை அனுமதிப்பதன் மூலம் இதுபோன்ற இழப்புகள் தவிர்க்க இயலாதது ஆகிவிடும். இத்தகைய இழப்புகளுக்கு ஆட்சியாளர்கள் எந்த வகையில் ஈடுசெய்ய முடியும் என்பதனை அரசு சிந்திக்க வேண்டிய தருணம் இது. எனவே எத்தகைய மாற்றுச் சிந்தனைக்கும் இடம் கொடுக்காது மதுக்கடைகளை மூடுவதன் மூலமே இது போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்துவோருக்கு அரபு நாடுகளில் இருப்பது போன்று கடுமையான தண்டனை வழங்கும் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும்.
மேலும் பாதிக்கப்படும் குடும்பத்தினருக்கு அதிகமான இழப்பீட்டுத் தொகையினை குற்றவாளிகளிடம் அபராதமாக பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் வேண்டுகோள். தொடர்பு எண்கள்: மாமனார் நூருல்லாஹ் ஹஜ்ரத் தொடர்பு எண்: 73 73 20 71 27 ஈமான் ஊடகத்துறை மற்றும் மக்கள் தொடர்பு செயலாளர்: முதுவை ஹிதாயத் - 00971 56 684 71 20
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteReply