Latest News

மடமையிலிருந்து விடுதலை பெறுவோம்


அளவற்ற அருளாளன்நிகரற்ற அன்பாளன்அல்லாஹ்வின் பெயரால்..

அல்லாஹ்வின் அடியார்களே!  அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

அதிரையின் கடற்கரைத் தெருவில் அமைந்துள்ள தர்ஹாவின் கபுருக்குச் சந்தனம் பூசுவதற்காகக் கடந்த 23.12.2012 பகல் 2.45மணியளவில் மூலஸ்தானத்துக்கு உள்ளே சென்ற பட்டத்து லெப்பை அலாவுத்தீன் இறந்து விட்டார்!  (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்).  இந்த இறப்பில் நாம் பெறவேண்டிய படிப்பினைகள் அநேகம் உள்ளன.

ஒரு வீட்டிலுள்ள குளியலறைக்குள் குளிப்பதற்காகச் சென்ற ஒருவர் குறிப்பிட்ட நேரம் தாண்டியும் வெளிவராவிட்டால்அந்த வீட்டார் என்ன செய்வார்கள்?  அதுவும்குளிக்கச் சென்றவர் இரத்த அழுத்த நோயாளியாகவும் சர்க்கரை நோயாளியாகவும் இருப்பாராயின்,எவ்வளவு கூடுதல் கவனத்துடன் செயல்படுவார்கள்வழக்கமாகப் பதினைந்து நிமிடத்தில் தம் குளியலை முடித்துக்கொண்டு வெளிவரவேண்டியவர்அரைமணி நேரமாகியும் வெளிவராவிட்டால்?
 
ஒரு மணி நேரம் தாண்டிய பின்னரும் உள்ளே சென்றவர் என்னவானார் எனும் கவலையற்று இருந்துவிட்டுகடைசியில் அவரை உயிரிழந்தவராகத் தூக்கிவந்து போட்டுஅவருக்கு அநியாயம் இழைத்துவிட்டுஎவ்விதக் குற்ற உணர்வும் இல்லாமல்,தம் குற்றங்களை அல்லாஹ்வின்மீது திசை திருப்புவது அறிவற்றவர்களின் செயலாகும்.  அப்படிப்பட்ட ஓர் அறிவீனம்தான் மர்ஹூம் அலாவுத்தீன் விஷயத்தில் அரங்கேறியது.  வழக்கமாக,ஆகக் கூடுதலாக 45 நிமிடத்தில் வெளியே வரவேண்டிய சர்க்கரை நோயாளியான அவர்ஏறத்தாழ மூன்று மணி நேரம் (மாலை ஐந்தரை)வரை என்னவானார்என்று கபுருக் கதவைத் திறந்து அல்லது உடைத்துப் பார்ப்பதற்கு தர்ஹாவில் குழுமியிருந்தவர்களைத் தடுத்து நிறுத்திய அறிவீனம் எது?  அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் மௌட்டீகக் கொள்கையான தர்ஹா வழிபாட்டு நம்பிக்கை நிகழ்த்திய அநியாம்தான் அது என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. 

அல்லாஹ் கூறுகிறான்:

"மனிதர்களுக்கு நிச்சயமாக அல்லாஹ் எவ்வித அநியாயமும் செய்வதில்லைஎனினும்மனிதர்கள் தமக்குத் தாமே அநியாயம் செய்து கொள்கிறார்கள்." (அல் குர்ஆன் 10:44).

அல்லாஹ் மனிதனுக்குப் பகுத்தறிவை வழங்கிபடைப்பினங்கள் அனைத்திலும் உயர்ந்த படைப்பாக நம்மை ஆக்கியருளியிருக்க,அவனளித்த அருட்கொடையான அறிவைஎன்றோ இறந்துவிட்ட அவ்லியாவிடம் அடகு வைத்துவிட்டுஅல்லாஹ்வுடைய மௌத்து’ என்று கூர் மழுங்கிப்போய் கூறுதல் முறையல்ல.
 
"நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்.  நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே!என்று அல்லாஹ் தன் அருள் மறையில் (4:78) எச்சரிப்பதுமௌத்துக்கு அஞ்சி ஓடி எவரும் தப்பித்துக்கொள்ள முடியாது என்ற பொருளிள்தானே அன்றி,நம்முடைய மடமையினால் ஓர் உயிரை அநியாயமாகப் பறிகொடுத்துவிட்டுஅந்தக் குற்றத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவல்ல.
 
என்றோ மரணித்துபதினொரு இடங்களில் அடங்கப்பட்டதாகக் கூறப்படும் ஹாஜா அலாவுத்தீன் ஜிஷ்தீ எனும் பெரியாரின் உடல் அதிரையில்தான் உண்மையில் அடக்கப்பட்டது என்றே வைத்துக் கொண்டாலும்அந்தக் கபுருக்கு மேல் கட்டடம் கட்டப்பட்டிருப்பதும்,அந்தக் கபுருக்குச் சந்தனம் பூசுவதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்களால் வன்மையாகத் தடுக்கப்பட்டவை என்பதை இன்னும் ஏற்க மறுப்பது மடமையின் உச்ச கட்டமாகும்.

نَهَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ تُجَصَّصَ الْقُبُورُ وَأَنْ يُكْتَبَ عَلَيْهَا وَأَنْ يُبْنَى عَلَيْهَا وَأَنْ تُوطَأَ

"சமாதிகளுக்காகக் கட்டடம் எழுப்புவதையும் சமாதிகளின் மீது பூசுவதையும் எழுதி வைப்பதையும் சமாதிகளின் மீது அமர்வதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்தடை செய்தார்கள்"ஜாபிர் (ரலி) - திர்மிதீ 972, அஹ்மது 14748.

அவ்லியாக்களின் பெயரால் ஆண்டு தோறும் கந்தூரி எடுப்பதும்,அதில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை நடத்துவதும் பெரிய வழிகேடு என்பதைப் பல நபிமொழிகள் எச்சரிக்கின்றன.  அல்லாஹ்வின் கோபமும் அல்லாஹ்வின் தூதரின் சாபமும் கந்தூரிக்கு நிச்சயமாக உண்டு என்பதை விளக்கும் இதோ சில நபிமொழிகள்:

 وَلَا تَجْعَلُوا قَبْرِي عِيدًا عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَجْعَلُوا بُيُوتَكُمْ قُبُورًا 

"... எனது சமாதியை (கந்தூரிவிழா நடக்கும் இடமாக்கிவிடாதீர்கள்... என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்)எச்சரித்தார்கள்.அபூஹுரைரா (ரலி) : அஹ்மது 8449, அபூதாவூது1746 .

 َنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اللَّهُمَّ لَا تَجْعَلْ قَبْرِي وَثَنًا يُعْبَدُ

"... இறைவாஎனது சமாதியை வழிபடும் இடமாக ஆக்கிவிடாதே... என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அல்லாஹ்விடம் இறைஞ்சினார்கள்." அதா இப்னு யஸார் (ரலி) :அஹ்மது 7054, முஅத்தா மாலிக் 376 .
 
عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ زَائِرَاتِ الْقُبُورِ وَالْمُتَّخِذِينَ عَلَيْهَا الْمَسَاجِدَ وَالسُّرُجَ 

"சமாதிகளை தரிசிக்கச் செல்லும் பெண்களையும்அவற்றில் வழிபாடு செய்யும் பெண்களையும், (சமாதிகளில்)விளக்கேற்றும் பெண்களையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்)சபித்தார்கள்." இபுனு அப்பாஸ் (ரலி) : நஸயீ 2016, அபூதாவூது2817, அஹ்மது 2952, இபுனுமாஜா 1564.

  لَعْنَ اللَّه الْيَهُودِ وَالنَّصَارَى اتَّخَذُوا قُبُورَ أَنْبِيَائِهِمْ مَسَاجِدَ يُحَذِّرُ مَا صَنَعُوا

"நபிமார்களின் சமாதிகளை வணங்குமிடமாக ஏற்படுத்திக் கொண்ட யூதர்களையும் கிருத்துவர்களையும் அல்லாஹ் சபித்துவிட்டான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்உறுதிபடக் கூறினார்கள்தம்முடைய சமாதியை அவ்வாறு ஆக்கிவிடுவதைப் பற்றியும் எச்சரித்தார்கள்" - அன்னை ஆயிஷா(ரலி) : புகாரீ 3195, 4087, 4089, 5368, முஸ்லிம் 826, அஹ்மது 23976,நஸயீ 696, 2020, முஅத்தா மாலிக் 1387.
 
கந்தூரியும் கப்ரு வழிபாடும் அல்லாஹ்வால் மன்னிக்க முடியாத பெரும் பாவங்கள் என்பதை நம் ஊர் மக்களுக்குத் தெளிவாக -உறுதியாக எடுத்துச் சொல்லித் தடுக்க வேண்டியது நம் அனைவரின் மீதும் கடமையாகும்குறிப்பாகமார்க்கம் அறிந்த ஆலிம்கள் என்போர் மீது கட்டாயக் கடமையாகும்.  ஏனெனில்,மறுமையில் அவர்களுக்கு இது பற்றிக் கூடுதல் கேள்வியுண்டு! ஜமாஅத்தின் பொறுப்பாளர்களுக்கும் அவ்வாறே கூடுதல் கேள்விகள் மறுமையில் காத்திருக்கின்றன!
 
தம் மூதாதையரின் மட நம்பிக்கையை ‘இபாதத்’ என்று நம்பிப் பின்பற்றிஉயிர் நீத்த அலாவுதீனின் மண்ணறையின் ஈரம் காயும் முன்னர்அவ்லியாவின் சமாதிக்கு எதிரில் ஆடல் பாடல் கச்சேரிகளை அரங்கேற்றிய மனசாட்சியற்ற கந்தூரிக் கமிட்டியினரும்அதைத் தடுத்து நிறுத்தாமல் மௌனம் சாதித்து ஆதரவளித்த ஜமாஅத் பொறுப்பாளர்களும்கந்தூரி ஆதரவாளர்கள் அனைவரும் அவ்லியாவின்  பெயரால் கந்தூரி எனும் மடமையிலிருந்து இனியாவது விடுதலை பெற்றே ஆகவேண்டும்!
 

வெளியீடு 3/2012 - நாள் : 28.12.2012
 
அறிவுறுத்தும்,
 

அதிரை தாருத் தவ்ஹீத்
பதிவு எண் 4/130/2012
28G, Market (East) Street, P.O.Box 5 Adirampattinam – 614701
Tanjore Dist; Tamilnadu, India – Tel : +91-4373-240930; Email :salaam.adt@gmail.com

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.