நம் வாழ்க்கையில் ஏற்படும் பல சிரமங்களின்போது
சில நேரங்களில் செவிடனாக இருப்பது சிறந்ததாக இருக்கும்...
நாம் எந்த ஒரு முயற்சியோ,வேலையையோ ஆரம்பிக்கும்போது
கண்டிப்பாக அதை எதிர்க்க நான்கு பேர் இருக்கத்தான் செய்வார்கள்....
இல்லை குறை சொல்ல பத்து பேர் இருப்பார்கள்...
உதவி செய்யவில்லை என்றாலும் உபத்திரவம் செய்ய
இரண்டு பேர் இருப்பார்கள்...இப்படிப்பட்டவர்களை
கண்டும் காணாமல் இருக்க வேண்டும்...
இப்படித்தான்,ஒரு கிணற்றில் இரண்டு தவளைகள் விழுந்துவிட்டது.
முதல் தவளை கிணற்றை விட்டு வெளியேற விடாப்பிடியாய் முயற்சி செய்தது.
கிணற்றை சுற்றி நிறைய தவளைகள் உன்னால் முடியாது ....!!
உன்னால் முடியாது ...!!ஏன் முயற்சிக்கிறாய்???
என ஏளனம் பேசியது...
கடைசியில் அந்த தவளைஎவ்வளவோ முயற்சி செய்தும்
வெளியேற முடியாமல் இறந்து போனது.
இப்போது இரண்டாவது தவளையின் முறை...
அந்த தவளையும் முயற்சித்தது....
இப்போதும் வெளியே உள்ள தவளைகள் அதையே
சொல்லிக்கொண்டிருந்தன.இரண்டாவது தவளை
வெளியே உள்ள தவளைகளை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை...
விடா முயற்சியால் வெற்றிகரமாக வெளியேறியது...
வெளியே வந்தவுடன் நீங்க எல்லாரும்
ரொம்ப நேரமாக என்னம்மோ சொல்றீங்க...?
எனக்கு காது கொஞ்சம் கேட்காது...சாரி என சொல்லிவிட்டு
சுத்தமாக காது கேட்காத அந்த செவிட்டுத்தவளை
அடுத்த வேலையைபார்க்க கிளம்பியது....
இக்கதையில் மனிதர்களின் குணாதிசியங்களை பற்றி
தெரிந்து கொள்ளலாம்.வெற்றி பெற்றால் ஓடோடி
வருவார்கள்...தோல்வி அடைந்தாலோ இது உனக்கு
தேவையான்னு கேட்பார்கள்.இவர்களிடம் செவிடனாக
இருப்பதே மிக மிக சிறந்தது.
அடுத்து கழுதை கதை...
இதிலும் தன்னை சுற்றி வரும் புறக்கணிப்புகளை எல்லாம்கழுதை எப்படி புறக்கணித்து வெளியே வந்தது என பார்க்கலாம்.
ஊரின் கடைசியில் இருந்த மிகப்பெரிய பள்ளத்தில் கழுதை
தவறி விழுந்து விட்டது...
அதை காப்பாற்ற யாரும் வரவில்லை...
எட்டிப்பார்த்த சிலரோ...அய்யோ பாவம் என கூறிவிட்டு
நடையைக்கட்டினர்....அக்கம் பக்கம் இருந்த நல்ல மனிதர்களோ
வீட்டில் இருந்த குப்பைகளை அந்த பள்ளத்தில் உள்ள
கழுதையின் மீது கொட்டினர்...
கழுதை தன் மேல் கொட்டப்பட்ட அந்த குப்பைகளை
எல்லாம் உதறிவிட்டு தட்டிவிட்டு சளைக்காமல்
நின்றது...கடைசியில் அப்பள்ளம் முழுவதும் குப்பை
நிரம்ப கழுதை வெளியேறியது....
நம் வாழ்க்கையில் அய்யோ பாவம் என சொல்லப்படும்
புறக்கணிப்புகளை இக்கழுதை மேல் விழுந்த
குப்பை போல தட்டிவிட்டு உன்னால் முடியாது
என கூக்குரல் இடுபவர்களிடம் தவளைசெவிடன் போல
இருந்தால் கண்டிப்பாக நம்மால் வெற்றி அடைய முடியும்...
நன்றி : நேர்வழி
No comments:
Post a Comment