சுமை என்று தாய் நினைத்து இருந்தால் ?
பிறந்து இருப்போமா ?
சுமை என்று மரம் நினைத்து இருந்தால் ?
கனிகளை பெற்று இருப்போமா ?
சுமை என்று ஆசிரியர்கள் நினைத்து இருந்தால் ?
கல்வியை கற்று இருப்போமா ?
சுமை என்று காற்று நினைத்து இருந்தால் ?
சுவாசித்து இருப்போமா ?
சுமை என்று மேகம் நினைத்து இருந்தால் ?
நீரை பெற்று இருப்போமா ?
சுமை என்று பூமி நினைத்து இருந்தால் ?
இரவு பகலை கடந்து இருப்போமா ?
சுமை என்று எல்லாம் [கூடுமானது] நினைத்து இருந்தால் ?
எல்லாத்தையும் அடைந்து இருப்போமா ?
ஓ மனிதா !
எது சுமை ?
சுமை சுமை என்று காலத்தை தள்ளூகிறீயே !!
காலத்தை தள்ளுவது உனக்கு சுமையாக இல்லையா ?
K.M.A. ஜமால் முஹம்மது
Consumer & Human Rights.
S/o. K.M. Mohamed Aliyar (Late)
நன்றி : சேக்கனா M. நிஜாம்
அஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDeleteநல்லதோரு சிந்தனை உங்கள் சிந்தனைக்கு என் வாழ்த்துகள் ஜமால் காக்கா மனிதன் எதையும் சுமை என்று நினைக்காமல் சுமையையும் சுவையாக நினைத்தால் சுமையும் நமக்கு சுமையாக மாறிவிடும், மனிதனின் என்னத்தில் தான் உள்ளது சுமையும் சுவையும் ஆகவே நாம் எல்லோரும் சுவையாகவே நினைத்து செய்ல்படுவோம். சுமையாக எதையும் கருத வேண்டாம்.