விளையாட்டு போட்டிகள் – ஒருவருக்கு மன வலிமை, புத்துணர்ச்சியைத் தருவதோடு மட்டுமல்லாமல் ஆரோக்கியத்தை வழங்கி உடல்நலம் மேன்மையுறச் செய்கின்றது.
அந்தவகையில் நமதூரைச் சேர்ந்த முன்னோர்கள் பலர் தாங்கள் கல்வி பயின்ற காலக்கட்டங்களில் மாவட்ட, மாநில, தேசிய அளவில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு பல்வேறு பதக்கங்களைப் பெற்று நமதூருக்கு பெருமையை தேடித்தந்தார்கள். அவர்களால் நமதூருக்கு கிடைத்த சிறப்புகளை இன்றைய இளைஞர்களிடம் எடுத்துச்சென்று அவர்களிடமுள்ள விளையாட்டு திறமையை / ஆர்வத்தை வெளிக்கொணர வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் தமிழக அளவில் வருடந்தோறும் அதிரை ஸ்போர்ட்ஸ் கிளப் [ ASC ] சார்பாக நடத்தி வருகின்ற மராத்தான் நெடுந்தூர ஓட்டப் பந்தய போட்டியில் பல்வேறு ஊர்களிலிருந்து வீரர்கள் பலர் நமதூருக்கு வருகை புரிந்து போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளை தட்டிச்சென்றுள்ளனர்.
இவை அனைத்தும் நமதூருக்கு பெருமை தேடித்தருவதோடு மட்டுமல்லாமல் மத நல்லிணக்கத்துக்கு சிறந்த ஊர் என்ற பெருமையையும் தட்டிச்செல்லும். இதற்கு வலுவூட்டும் விதமாக அரசு அலுவலர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் பல்வேறு சமய சிறப்பு விருந்தினர்கள் என கலந்துகொண்டு போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்களை ஊக்கம் கொடுத்து உற்சாகப்படுத்தி வருகின்றனர்.
என்றும் போல இந்த வருடமும் சீரும் சிறப்போடு போட்டிகளை வருகின்ற 2013 ஜனவரி முதல் வாரத்தில் நடத்திட உத்தேசித்துள்ளதையடுத்து மாநில அமைச்சர் ஒருவரையும், மாவட்ட ஆட்சியர் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் ஆகியோரை சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்ள அழைப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் நமதூரைச் சேர்ந்த...
அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பு, அதிரை பைத்துல் மால், அதிரை வர்த்தக சங்கம், மனித உரிமைக் கழகம், அதிரை நல் வாழ்வு பேரவை போன்ற சமூதாய அமைப்புகளின் தலைமை நிர்வாகிகள், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் [ அதிரை கிளை ], தமிழக தவ்ஹீது ஜமாஅத் [ அதிரை கிளை ], இந்திய தவ்ஹீத் ஜமாஅத் [ அதிரை கிளை ], இந்திய முஸ்லீம் லீக் [ அதிரை கிளை ], தி.மு.க [ அதிரை கிளை ], அ.தி.மு.க [ அதிரை கிளை ], காங்கிரஸ் [ அதிரை கிளை ], தே.மு.தி.க [ அதிரை கிளை ], இந்திய மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் [ அதிரை கிளை ] போன்ற அரசியல் கட்சிகளின் தலைமை நிர்வாகிகள் மற்றும் ஏரிபுறக்கரை கிராமம், கரையூர் தெரு, காந்தி நகர், பழஞ்செட்டித் தெரு போன்ற பஞ்சாயத்தார்கள் உள்ளிட்ட அனைவரின் ஒத்துழைப்பைக் கோருவது என்றும், இதற்கும் மேலாக அதிரை காவல்துறை, அதிரை பேரூராட்சி, ஏரிபுறக்கரை கிராம ஊராட்சி, அரசு மருத்துவமனை போன்றவற்றின் சார்பாக வழங்கும் ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
ASC சார்பாக போட்டிற்கான பரிசுத்தொகை மற்றும் சிறப்பு பரிசுகள் கீழ்கண்டவாறு முடிவு செய்யப்பட்டுள்ளது.
1. முதல் பரிசு : ரூபாய் 11,111
2. இரண்டாம் பரிசு : ரூபாய் 8,888
3. மூன்றாம் பரிசு : ரூபாய் 5,555 [Confirmed by one brother who is living in London ]
4. நான்காம் பரிசு : ரூபாய் 3,333
5. சிறப்பு பரிசுகள் : 50 நபர்களுக்கு
6. சீருடை அன்பளிப்பு : 300 நபர்களுக்கு
7. மேடை மற்றும் சவுண்ட் சர்வீஸ்
8. தண்ணீர் : 150 மூடைகள்
9. எனர்ஜி ட்ரீங் : 300 நபர்களுக்கு
10. விளம்பரம் [ ஆட்டோ + நோட்டீஸ் ]
11. முதலுதவி
மேற்கண்ட பரிசுகள் மற்றும் இதர செலவினங்களில் ஏதாவது ஒன்றை அல்லது குறிபிட்ட சிலவற்றை தனியாகவோ அல்லது பகிர்ந்தோ அல்லது நிறுவனம் சார்பாகவோ அல்லது அமைப்பு சார்பாகவோ ஏற்றுக்கொள்வோர் கீழ்க்கண்ட அலைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ள தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
0091 9442038961 / 9994068870 / 9944499691 / 9566377607
மேலும் நமதூரில் கடந்த இரு முறை நடைபெற்ற போட்டிகளுக்கு பரிசுகள் மற்றும் ஒத்துழைப்புடன் கூடிய ஆலோசனைகளை வழங்கி கெளரவித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் எங்களின் நன்றியை அன்புடன் தெரிவித்துக்கொள்வதோடு மட்டுமல்லாமல் நடத்த இருக்கின்ற மராத்தான் நெடுந்தூர ஓட்டப் போட்டிக்கு தங்களின் மேலான ஆலோசனை மற்றும் ஒத்துழைப்பை அன்புடன் எதிர்பார்க்கின்றோம்.
இப்படிக்கு,
நிர்வாகம் - அதிரை ஸ்போர்ட்ஸ் கிளப் [ASC ]
No comments:
Post a Comment