தம்பி தலை வலிக்கிறது ஒரு பெனடால் மாத்திரை வாங்கிக்கிட்டுவா
உடம்பை ஒரு குடும்பம் என்று நினைத்துக்கொண்டால் கட்டளைகள் போடும் அப்பா தான் மூளை .வேலைக்கு போய் சம்பாதித்துவரும் அண்ணன் தான் நுரையீரல் பட பட வென்று சத்தம் போடும் அக்கா தான் இதயம் சமைத்து எல்லோரையும் வேலைக்கு அனுப்பி வீட்டை சுத்த படுத்தி வருமானத்தையும் சேமித்து குடும்பத்தையே கட்டிக்காக்கும் அம்மா தான் சிறுநீரகம்.
வலி நிவாரண மாத்திரைகள் சிறுநீரகத்தை மட்டும் அல்ல நம் ஒட்டு மொத்த அவயவங்கலான இதயம்,கல்லீரல்,மற்றும் இரத்த அணுக்களையும் பாதிக்கின்றன. சிறுநீரகத்திற்கு மிகவும் மோசமான எதிரி மருத்துவரின் ஆலோசனை பெறாமல் நாமலே எடுத்துக்கொள்ளும் வலி நிவாரண மாத்திரைகள்தான்.
100 பேருக்கு ஒருவருக்கு வலி நிவாரண மாத்திரைகளால் சிறுநீரக கோளாறுகள் வருகிறது. வளர்ந்த சராசரி மனிதன் சிறுநீரகத்தில் ஒரு மில்லியன் தெப்ஃபான்கள் வேலை செய்கிறது. மூட்டுவலி, கை கால் குடைச்சல், தலைவலி, வயிற்றுவலி, தடுமல் என்று எதற்கு எடுத்தாலும் மாத்திரை போடாமல் நோய் எதிர்ப்பு சக்தியை நாமே வளர்த்துக்கொள்ள வேண்டும், முட்டை, பால், காய்கறி,கீரைவகைகள்,இவைகளில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளன .
சிறுநீரக கல் பழம்பெரும் வியாதி. இது கி.மு 600 ஆம் ஆண்டிலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சில நூற்றாண்டுக்கு முன்பே ஒரு வகை இந்திய மூலிகையை சிறுநீரகக் கல்லுக்கு மருந்தாக உபயோகப்படுத்தி பலன் கண்டிருக்கிறார்கள் அமெரிக்க மருத்துவர்கள். இது நாம் மிகவும் பெருமைப்படவேண்டிய விஷயம்.
கருவில் வளரும் குழந்தைக்கு முதலில் வளரும் உறுப்பு இதயம் என்றால் கரு வளர்ந்த ஏழாவது வாரத்தில் சிறுநீரகம் வளரத்துடங்குகிறது. சிறுநீரின் அடர்த்தியை கண்டுபிடிக்க யுரோ மீட்டர் பயன்படுகிறது. மேலும் சிருநீரகக்ககோளாருக்கு திராட்சைப்பழம், வாழைத்தண்டு மிகவும் நல்லது
அஸ்ஸலாமு அலைக்கும்....
தகவல்
அன்புடன்
K.M.S.சஹாபுதீன்,மலாக்கா,மலேசியா.
No comments:
Post a Comment