நமது பக்கத்து கிராமத்தை சேர்ந்த முன்னாள் ஜனாதிபதி R. வெங்கட்ராமனின் தடங்களையும் மீறி சேது ரோடாக இருந்து இன்றைக்கு கிழக்கு கடற்கரைச் சாலையாக பரிணமித்துள்ள ECR ரோடு, வாகன ஓட்டிகளுக்கு பயன்படுகின்றதோ இல்லையோ நமதூர் மாடுகளுக்கு நன்கு பயன்படுகின்றது.
காலையிலிருந்து மாலை வரை கடைத்தெரு, பஸ் ஸ்டாண்ட் மற்றும் சாலை ஓரங்களிலிலேயே கண்டதையும் மேயும் மாடுகள் இரவில் அசைபோட வசதியாக ECR ரோட்டையே தேர்ந்தெடுக்கின்றன (ஒருவேளை ஒனர் வீடுகள் மறந்துவிட்டனவோ), அதனால் உனக்கு என்ன என்ற உங்கள் கேள்வியும் காதில் விழுகிறது! சொல்கிறேன், கேளுங்கள்...
சுமார் 20 தினங்களுக்கு முன் அதிரை காவல்துறை சார்பாக நகர் முழுவதும் ஓர் அறிவிப்பு, போக்குவரத்துக்கு இடைஞ்சலாக திரியும் மாடுகளை ஒழுங்காக வீடுகளில் கட்டும்படி வேண்டுகோள் விடுத்தார்கள், இந்த அறிவிப்பு மாடுகள் காதில் வேண்டுமானால் விழுந்திருக்கலாம் ஆனால் மாட்டு ஓனர்கள் காதில் விழவே இல்லை என்பதை நிரூபிக்கும் புகைப்படங்களே இவை.
ECR என வெட்டி பெருமைக்கு மாவு இடிக்கின்ற பெயர் ஆனால் தெரு விளக்குகள் என்ன இராத்திரி நேர தட்டு வண்டி கடலை வியாபாரியின் காண்டா விளக்கு கூட சாலை ஓரங்களில் தெரியாத இருட்டு, இந்த நெடுஞ்சாலைக்குத் தான் கிழக்கு கடற்கரைச் சாலை என பெயர் சூட்டியுள்ளனர், இந்த மாடுகளை கூட டார்ச் லைட் வெளிச்சத்தில் தான் படமெடுக்க முடிந்ததென்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
இந்த கும்மிருட்டு கிழக்கு கடற்கரை சாலையில் ஓடும் வாகனங்களை விட பறக்கும் வாகனங்களே அதிகம், இன்னும் இராத்திரிகளில் வரும் வாகனங்களின் வேகத்தை அளவிட ஸ்பீடாமீட்டர்கள் இல்லை என்ற நிலையில் கடந்த வருடம் காலேஜ் அருகே இரவில் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான லாரி மோதியதால் சாலையில் சென்று கொண்டிருந்த ஏராளமான ஆடுகளும் அதன் மேய்ப்பாளரும் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.
கடந்த இரு மாதங்களுக்கு முன் ஹவாண் ஹோட்டல் அருகே கேரள பேருந்தால் ஒரு பைக் விபத்து. மேலும் 4 தினங்களுக்கு முன் இரயில்வே கேட் அருகே இரவில் பைக் விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் என அசம்பாவிதங்கள் தொடர்கின்றன.
அடுத்தவர் உயிர்கள் என்ன உங்கள் மாடுகளை விட அற்பமானதா? இப்படி விபத்துக்கள் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ள சாலையில் தெரிந்தும் பொறுப்பின்றி மாடுகளை விட்டு வைத்திருப்பது நியாயமா? மாட்டு சொந்தங்களே!
நடவடிக்கை எடுக்க வேண்டிய தேர்வுநிலை (!?) பேரூராட்சியும், நெடுஞ்சாலைத் துறையும் என்ன செய்து கொண்டுள்ளன? காவல்துறை அறிவிப்போடு தன் கடமையை முடித்துக் கொண்டதா?
யாராவது ஒரு கிராமராசன் வந்து வாகன ஓட்டிகளையும், பாதசாரிகளையும், காதிர் முகைதீன் பள்ளி, கல்லூரி மாணவர்களையும் காப்பாற்றுங்கள் என கத்தணும் போல் இருக்கு. வருவீர்களா, மாட்டு ஓனர்கள் படிப்பினை பெறும் அளவில் மாடுகளை வாரிக்கொண்டு போவீர்களா?
எதிர்பார்ப்புடன்
அதிரைஅமீன்
புகைப்படங்கள்
ஆஷிக் அகமது
அஸ்ஸலாமு அலைக்கும் நல்ல தகவல் தந்தமைக்கு நன்றி நானும் ஊறுக்கு விடுப்பில் சென்றிருந்த போது பார்த்தேன் உண்மைதான் இது தான் ecr ரோட்டின் நிலை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதில் கவனம் செலுத்துவார்களா என்று பார்ப்போம்
ReplyDeleteமாட்டிடமிருந்து பாலைமட்டும் நல்ல கர கரன்னு கரந்துட்டு கழட்டி விட்டுவிடுகின்றனர். இதனால் ஆங்காங்கே அனாதையாக சுற்றித் திரிகின்றன.
ReplyDeleteஹேய்....ஹேய்...இந்தா...பா....பா...இன்சிறு.... என்று சொல்வதை வீட வேரன்னச் சொல்ல !?
வீட்டு ஓனர் தன் வீட்டு மாடுகளை கொஞ்சம் அடக்கி வைத்தால்லொழிய....
வேறொன்றும் சொல்வதற்கில்லை
அன்புச்சகோதரரர் அதிரை அமீனின் சமூக விழிப்புணர்வை தூண்டும் ஆக்கங்கள் தொடர வாழ்த்துகள்...