Latest News

சந்திப்பு : ‘மனித உரிமைக் காவலர்’ கோ.மு.அ. ஜமால் முஹம்மது அவர்கள்



1986 ஆம் ஆண்டு நமது நாட்டில் இயற்றப்பட்ட நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை பயன்படுத்தி நுகர்வோர் மத்தியில் விழிப்புணர்வு பெறுவதன் மூலம் நுகர்வோர் உரிமை நலன்களைப் பெருமளவு நாம் பாதுகாக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

‘சந்திப்பு' தொடருக்காக....

1. நுகர்வோர் என்றால் என்ன ?
2. நுகர்வோரின் கடமைகள் என்ன ?
3. மனித உரிமை மீறல் பற்றி...
4. சட்டத்தில் குறிப்பிடும் மனித உரிமைகள் பாதுகாப்பு தொடர்பாக...

ஆகிய கேள்விகளுடன் சகோ. கோ.மு.அ. ஜமால் முஹம்மது அவர்களுக்கு மின்னஞ்சல் செய்து அவர்களின் கருத்தைப் பெற்றோம்.

சகோ. கோ.மு.அ. ஜமால் முஹம்மது அவர்களைப் பற்றிய சிறுகுறிப்பு :
நமதூர் காதிர் முகைதீன் பள்ளி மற்றும் கல்லூரியில் கல்வி பயின்றுள்ள இவர் துபாய் நாட்டில் பணிபுரிந்து வருகின்றார். நுகர்வோருக்கு பாதுகாவலராகவும், மனித உரிமைக் காப்பாளராகவும் இருப்பது இவருக்கு கூடுதல் சிறப்பாகும்.

சமூக ஆர்வலரான இவர் கடந்த காலங்களில் வானொலிக்கு சமூக விழிப்புணர்வு ஆக்கங்கள் எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இளம் பதிவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் வலைதளத்தில் பதியும் ஆக்கங்களுக்கு தொடர்ந்து பின்னூட்டமிட்டு அவர்களை உற்சாகப்படுத்தி வருகின்றார்.

[ சகோ. கோ.மு.அ. ஜமால் முஹம்மது அவர்களின் தகப்பனார் மர்ஹூம் கோ.மு. முஹம்மது அலியார் அவர்கள் ]

நுகர்வோர் என்றால் என்ன ?
ஒரு தனிப்பட்ட நபர் தன் சொந்த உபயோகத்திற்கு பொருள் வாங்குவதற்கும் அல்லது வாங்காமல் இருப்பதற்கும், சில சேவைகளை பெறுவதற்கும் அல்லது பெறாமல் இருப்பதற்கும், விளம்பரங்களை காண்பதற்கும் அல்லது காணாமல் இருப்பதற்கும், மார்கெட்டிங் போன்றவற்றை சந்திப்பதற்கும் அல்லது சந்திக்காமல் விட்டுவிடுவதற்கும்.  இவை எல்லாவற்றிக்கும் சுயமாக முடிவு எடுக்க நுகோர்வோருக்கு முழு உரிமை உண்டு. ஆகையால் நுகர்வோர் என்று அழைக்கப்படுவர்.

நுகரப்பட்ட பொருள் தரம் குறைந்து இருந்தாலோ அல்லது பழுது ஏதும் காணப்பட்லாலோ, விற்பனை செய்தவர் நுகர்வோருக்கு தகுந்த காரணம் கொடுக்க வேண்டும் அல்லது வேறு நல்ல பொருளை மாற்றிக் கொடுக்க வேண்டும் அல்லது அதுக்குரிய பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும், தவறும் பட்சத்தில் நுகர்வோர் விற்பனை செய்தவருக்கு எதிராக வழக்கு தொடரலாம்.

நுகர்வோரின் கடமைகள் என்ன ?

நுகர்வோர் உரிமைகள், கடமைகள் ஆகியவை குறித்து பொதுமக்கள் விழிப்புணர்வு பெற வேண்டியது மிகவும் அவசியம்.

நுகர்வோர் தொடர்பான பிரச்சனைகள், அதன் சட்டங்கள், உரிமைகளை நுகர்வோர் அமைப்புகள் பார்த்துக்கொள்ளும் என பொதுமக்கள் விழிப்புணர்வு பெறாமல் ஒதுங்கி இருந்து விடக்கூடாது.

நாம் அன்றாடம் உபயோகப்படுத்தும் பொருள்களில் இருவகைகள் உண்டு, அதில் ஓன்று வெளி உபயோகம், மற்றொன்று உள் உபயோகம். இதில் காலவாதியான அல்லது கலப்படமான பொருள்கள் நம் மத்தியில் வரலாம், இதனை சரியான முறையில் கண்டறிந்து அதனை ஒதுக்குவதிலும், விழிப்புணர்வுடன் இருப்பதிலும் நுகர்வோரின் பங்கு முக்கியமானது.

சமூதாயத்தில் குறிப்பாக நுகர்வோரை ஏமாற்றும் செயல்கள் தொடக்கத்திலே கண்டறிந்து அகற்ற வேண்டும். உதாரணத்திற்கு பிளாஸ்டிக் பொருட்கள் நமக்கு பயன்படுவதாக இருந்தாலும், அது சுற்றுச்சூழலுக்கு மிகவும் கேடு விளைவிக்கக் கூடியது. மக்கும் தன்மையற்றது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும், தற்போது நமதூரில்கூட பேரூராட்சி தலைவர் அன்புத்தம்பி ஜனாப் அஸ்லம் அவர்களின் முயற்சியால் பிளாஸ்டிக் பொருட்கள் தடைசெய்யப்பட்டுள்ளது ஒரு விழிப்புணர்வான விஷயம். பொதுமக்கள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் என அனைவரும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தமாட்டோம் என்று ஆழமான உறுதிமொழி எடுக்க வேண்டும்.

நாம் சில சமயங்களில் தாமதமான அல்லது தரம் குறைவான சேவைகளைப் பெறவேண்டிய நிலைக்கு ஆளாக்கப்படுகிறோம். அதுபோன்ற நெருக்கடியான நேரங்களில் பிரச்சனைகளை எதிர்கொள்ள நுகர்வோர் தங்களுக்குரிய உரிமைகளையும், கடமைகளையும் அறிந்துகொண்டு அதற்கேற்றார்போல் செயல்படணும்.

முதலில் மனித உரிமைகளைப் பார்ப்போம்...

மனிதன் ஆறு அறிவுகளை பெற்றவன். மனிதனைவிட குறைவான அறிவுகளை பெட்டார் விலங்குகளுக்கும், தாவரங்களுக்கும் உரிமை இருக்கும்போது மனிதனுக்கு இருக்கக்கூடாதா ?

மனிதர்கள், மனிதர்களாகப் பிறந்த காரணத்தினால் அவர்களுக்குக் கிடைத்த அடிப்படையான, விட்டுக் கொடுக்க இயலாத, மறுக்க முடியாத சில உரிமைகள் நாம் மனித உரிமைகள் என்று அழைக்கின்றோம்.
மனித உரிமைகள் யாராலும் வழங்கப்பட்டது கிடையாது. எனவே மனித உரிமைகளை எவராலும் பறிக்க முடியாது.

நான் லண்டன் தேசத்தில் மூன்று ஆண்டுகள் இருந்தேன், அங்கு நூறு சதவீதம் நுகர்வோர் மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்புகள் மிகவும் நேர்த்தியாக மதிக்கப்பட்டு வருகின்றன.

மனித உரிமை மீறல்கள்...

எந்த ஒரு தேசத்திற்கும், அரசிற்கும், அதிகார அமைப்பிற்கும், எவருக்கும் மனித உரிமைகளை மீறுவதற்கான அதிகாரம் கொடுக்கப்படவில்லை.

மனித உரிமை மீறல்கள் இன்று ஒரு சில தேசங்களில் சர்வ சாதாரணமாகிவிட்டது, உதாரணமாக நம் அருகில் உள்ள தேசமான இலங்கையின் கடற்படையாளர்கள் தமிழக மீனவர்களை ஒவ்வொருநாளும் துன்புருத்துதலும் அதற்கு பல கண்டனங்களும் எழுந்த வண்ணம் இருகின்றன. இந்த இடத்தில் மனித உரிமைகள் எங்கே ? இதுவும் ஒருவகையில் மனித உரிமை மீறலே, இந்த மீறல் ஏன் நடக்கின்றது, ஒரு சமயம் நம் மீனவர்கள் தங்களுக்குக் கொடுக்கபட்டிற்கும் மீன்பிடி எல்லையை மீறுகின்றனரா என்பதையும் கவனிக்கப்பட வேண்டும். மொத்தத்தில் தவறு எங்கோ நடக்குது.

அடுத்தப்படியாக மற்றவருடைய பொருள்களை அவர்களின் அனுமதி பெறாமல் நாம் உபயோகிக்க முயற்சிப்பதும் ஒருவகையில் மனித உரிமை மீறல்தான்.

கடைகளில் பொருள் வாங்குவதற்காக சென்று அங்குள்ள பொருள்களை தேவை இல்லாமல் அமுக்கி பார்ப்பதும் சொரண்டி பார்ப்பதும் லேசாக அதை திறக்க முயற்சிப்பதும் இதுவும் ஒருவகையில் மனித உரிமை மீறல்தான்.

சட்டத்தில் குறிப்பிடும் மனித உரிமைகளை பாதுகாப்பது தொடர்பாக..
.
மனித உரிமைகளை பாதுகாப்பது என ஒவ்வொரு நாட்டிலும் சட்டங்கள் இயற்றி இருந்தாலும் இன்று பல நாடுகளில் இது செயல்பாட்டில் இல்லை. விழிப்புணர்வு என்பது எல்லோருக்கும் பொதுவே, இது அதிகாருகளுக்கு ஓன்று, பொதுமக்களுக்கு ஓன்று என்று கிடையாது. ஆயினும் பொதுமக்களும் அரசு அதிகாரிகளும் ஒருத்தருக்கொருத்தர் ஒத்துழைத்தால் மட்டுமே மனித உரிமைகளை முழுவதுமாக பாதுகாக்கலாம்.

இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு ஊரிலும் நுகர்வோர் மற்றும் மனித உரிமை கழகம் தொடக்கி அதில் நல்ல அனுபவமுள்ள ஆர்வமுள்ளவர்களை ( படிப்பறிவும், பட்டறிவும் இருக்கனும் )  தேர்ந்தெடுத்து, முறையாக செயல்பட்டால் எத்தனையோ எட்டாதக் காரியங்களை எட்டிவிடலாம்.

மாணவச் செல்வங்களே, வாலிபர்களே, பொதுமக்களே நேற்று போய்விட்டது, இன்று கடந்து விட்டது, இன்ஷாஅல்லாஹ் அந்த வல்ல நாயன் நாளை பொழுதை நமக்காக ஆயப்படுத்தி வைத்துவிட்டான்., நீங்கள் அனைவரும் ஒரு நல்ல முடிவு எடுத்து ஒற்றுமையுடன் ஏன் செயல்பட முடியாது ?

மாணவச் செல்வங்களே ! 

பெற்றோர்கள், ஆசிரியர்கள் திட்டிவிட்டார்களா ?
அதனால் தற்கொலை செய்துகொள்ளலாம் என்ற முயற்சியா ?

தயவு செய்து கொஞ்சம் நில்லுங்கள்.

தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு உங்களுக்கு துணிச்சல் இருந்தால் !
உங்களால் ஏன் படித்து முன்னுக்கு வர முடியாது ?
உங்களால் ஏன் எதையும் எதிர்கொள்ள முடியாது ?
உங்களால் ஏன் சாதிக்க முடியாது ?
உங்களால் ஏன் வாழ்ந்து காட்ட முடியாது ?

எந்தப் பெற்றோரும் தன் பிள்ளை நாசமாக போகட்டும் என்று நினைக்க மாட்டார்கள்.

எந்த வாத்தியாரும் தன் மாணவன் கெட்டு போகட்டும் என்று நினைக்க மாட்டார்கள்.

அவர்கள் கண்டிப்பதெல்லாம் உங்கள் நன்மைக்கே தவிர தீமைக்கேதுவானது ஒன்றும் இல்லை.

இந்த தேசத்தின் திறவுகோல் உங்கள் கையில், சிந்தித்துப் பாருங்கள் மாணவச் செல்வங்களே !

உனது உரிமையை இழக்காதே ! பிறர் உரிமையை பறிக்காதே !!

சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! 'சந்திப்புகள்' தொடரும்...

1 comment:

  1. மேற்கூறிய சகோதரர் காதிர் முஹைதீன் உயர்நிலைப் பள்ளியில் படித்தது தெரியும். காதிர் முஹைதீன் கல்லூரியிலும் பயின்றாரா? எனக்குத் தெரியவில்லை

    ReplyDelete

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.