Latest News

  

‘சந்திப்பு’ : தலைமை ஆசிரியர் ஹாஜி S.K.M. ஹாஜா முஹைதீன் [காணொளி]





சமூக மேம்பாட்டுக்கும், மாற்றத்துக்கும் வித்திடக்கூடியக் கல்வி சமூகத்தில் ஒரு முக்கிய பங்கை வகிக்கின்றன என்றால் மிகையாகாது. இக்கல்வியை ஒரு சேவை எனக்கருதி மாணாக்கர்களுக்கு திறம்பட புகட்டுவது நமது ஆசிரியப் பெருமக்களே !

மேலும் மாணவர்களின் எதிர்காலத்தை நிர்மாணிப்பதிலும் பெரும் பங்கு வகிக்கும் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் தினமாக ‘ஆசிரியர் தினம்’ கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.

‘சந்திப்பு’ தொடருக்காக இந்த வாரம்...

1. ஆசிரியர் தினத்தைப்பற்றி...
2. ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு கூறும் அறிவுரைகள்...

ஆகிய கேள்விகளை முன்வைத்து நமதூர் கா.மு. ஆண்கள் மேல் நிலைப்பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் ஹாஜி S.K.M. ஹாஜா முஹைதீன் அவர்களை ஒரு அருமையான இடத்தில் வைத்து அவர்களின் கருத்தைப் பெற்றோம்.

ஹாஜி S.K.M. ஹாஜா முஹைதீன் அவர்களைப் பற்றிய சிறு குறிப்பு :

நமதூர் கா.மு. ஆண்கள் மேல் நிலைப்பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் ஹாஜி S.K.M. ஹாஜா முஹைதீன் அவர்கள் கணிதத்துறையில் பட்டம் பெற்றிருந்தாலும் தமிழ் இலக்கியத்தின் மீதுள்ள ஆர்வத்தால் சிறந்த சொற்ப்பொழிவாளராகவும், எழுத்தாளராகவும் இருக்கின்றார். இவர் எழுதிய ‘என்றும் எதிலும் இஸ்லாம்’, கல்வி கற்போர் கடமை’ ஆகிய நூல்கள் பிரபலமானவை ஆகும்.

இவரால் எழுதப்பட்ட ‘மாவீரன் அலெக்ஸாண்டர்’, ‘தீரன் திப்பு சுல்தான்’ போன்ற நாடகங்களும், பள்ளி மாணவர்களுக்கான அறிவுத்திறன் போட்டிகளும் ( வினாடி-வினா ) வானொலியில் ஒலிப்பரப்பாகியுள்ளது மேலும் ‘உமறுப் புலவரின் சிந்தனைகள்’ என்ற தலைப்பில் வானொலியில் உரை நிகழ்த்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பள்ளி மற்றும் கல்லூரிகளில் இவர் எழுதிய சமூக விழிப்புணர்வு நாடங்கள் பல்வேறு மேடைகளில் அரங்கேற்றுப்பட்டுள்ளன குறிப்பாக ‘தாயகமே உனக்காக’, திறக்கட்டும் சிறைக்கதவு’, ‘புலித்தேவன்’,அட்வகேட் சுந்தரம் BA., B.L, ‘மாவீரன் அலெக்ஸாண்டர்’, ‘தீரன் திப்பு சுல்தான்’ போன்றவைகளாகும்.
                     'புலித்தேவன்' என்ற சமூக விழிப்புணர்வு நாடகத்தில் பங்குபெற்ற மாணவனுக்கு பரிசு வழங்கும்
                     நமது தலைமை ஆசிரியர் S.K.M. ஹாஜா முஹைதீன் அவர்கள்.


‘தேசிய நல்லாசிரியர் விருது’ பெறுவதற்குரிய அனைத்து சிறப்புகளை பெற்றிருந்தும் இரண்டு முறைகள் கல்வித்துறையால் பரிந்துரை செய்யப்பட்டு ‘விருது’ கைநழுவிப்போனது அவருக்கு மட்டுமல்ல நமதூருக்கே பெரும் ஏமாற்றமே !


சேக்கனா M. நிஜாம்
இறைவன் நாடினால் ! ‘சந்திப்புகள்’ தொடரும்...

1 comment:

  1. கணித ஆசிரியராய் அறிமுகமாகி, தலைமையாசிரியராய ் உயர்வடைந்து எங்கள் உள்ளங்களில் நீங்கா இடம் பெற்றுள்ள ஆசிரியர் அவர்கள் “நடமாடும் பல்கலைக் கழகம்”!
    1) கணித வினாக்களிலும், செய்முறை விளக்கவுரைகளிலு ம் தூய தமிழ் இலக்கணம் சொல்லிக் கொடுத்தவர்கள்
    2) அவர்கள் எழுதி இயக்கிய ‘எழுத்தாளர் ஏகாம்பரம்” நாடகத்தில் அரசு வழக்கறிஞராக நடித்தது எனக்குள் நானே “வழக்கறிஞரக” ஆனது போல் இன்றும் நினைக்கின்றேன்.
    3) பேச்சு, கவிதை, நாடகம், வினாடி வினா, என்று பற்பல துறைகளிலும் மிளிரும் அவர்களை நாங்கள் ஆசானாக அடையப் பெற்றது அல்லாஹ் எங்கட்கருளிய பேறாகும்!
    அன்னாரின் நீண்ட ஆயுளுக்கும் இன்னும் சிறப்பாக எங்களை வழிநடத்தவும் வேண்டி அல்லாஹ்விடம் இறைஞ்சுகின்றேன் .

    ReplyDelete

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceTemplateism Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.