அதிரையில் தொடர் மின்வெட்டு காரணமாக 12 மணி நேரத்திற்கு மேல் மின்சாரம் தடைபடுகிறது.
இதனால் குடிநீர்தேக்க தொட்டிகளில் முழுமையாக குடிநீர் ஏற்ற முடியவில்லை. குறைந்தஅளவே குடிநீர் ஏற்றுவதால் சில தெருக்களுக்கு மட்டுமே குடிநீர் செல்கிறது. தூரத்தில் உள்ள தெருக்களுக்கு குடிநீர் சென்றடைவதில்லை காந்தி நகர், கரையூர் தெரு, கடற்கரைத் தெரு நடுத்தெரு,ஹாஜா நகர் உட்பட 10க்கு மேற்பட்ட தெருக்களுக்கு குடிநீர் விநியோகிக்கப்படவில்லை.
இதனால் காந்திநகர் தெருவாசிகள் ஒன்று சேர்ந்து தனியாரிடம் பணம் கொடு த்து குடிநீர் வரவழைக்கப்பட்டு அப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
மேலும் இதுபோன்று குடிநீர் பிரச்னை பல தெருக்களில் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் இந்த பிரச்னைக்கு முக்கிய தீர்வு காண வேண்டும். குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என வலியுறுத்தி இன்று காலை நமதூர் மின்சாரவாரிய அலுவலகம் முன்பு ஏராளமான பொதுமக்கள் மற்றும் அதிரை நகர திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நன்றி : அதிரைஎக்ஸ்பிரஸ்
No comments:
Post a Comment